“ஜல்லிக்கட்டு கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் என்னை கைது செய்ய வேண்டும்” என்று தமிழ்நாடு காவல்துறை நடிகர் சிம்பு வலியுறுத்தி உள்ளார்.

செய்தியாளர்களை இன்று சந்தித்த சிம்பு பேசியதாவது:

“ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்கள் தானாகவே உணர்வோட வந்து நின்னாங்க. இளைஞருங்க மட்டுமில்லாம, பெண்கள் குடும்பம்னு எல்லோரும் வந்திருந்தாங்க  உலகமே நம்மை திரும்பிப் பார்க்கிற அளவுக்கு,  அகிம்சை வழியில, சைலண்ட்டான நீட்டான போராட்டமா நடந்துச்சு. எத்தனை நாள்னு சரியா தெரியல ஆறு நாளோ, ஏழு நாளோ… சைலண்டா போராட்டம் நடந்துச்சு.  பட்…  லாஸ்ட் ஒருநாள் நடந்த சம்பவங்கள்….. அது எல்லாருக்கும் தெரியும்.

அன்னைக்கு  அஞ்சு மணிக்கு ஜல்லிக்கட்டுக்காக சட்டமன்றத்துல தீர்மானம் நிறைவேத்துறாங்க. அது முடிஞ்ச உடனே அரசு சார்பில மெரினாவுக்கு வந்து எல்லா மீடியாவையும் கூப்பிட்டு, இவ்வளவு நாள் நீங்க பட்ட கஷ்டத்துக்கு தீர்வு கிடைச்சிருக்கு. நாங்க இதை  பண்ணியிருக்கோம். இனிமே இப்படி பிரச்சினை வராது. வந்தா சேர்ந்து நிற்போம்னு சொல்லியிருந்தா.. அதை கொண்டாடிட்டு வீட்டுக்குப் போயிருக்கலாம்.

ஆனா கலவரம்னு ஏகப்பட்ட பேரை அரெஸ்ட் பண்ணியிருக்காங்க. அவங்க எல்லாரையும் உடனே ரிலீஸ் பண்ணணும். இல்லேன்னா என்னை அரெஸ்ட் பண்ணுங்க.

என்னை அரெஸ்ட் பண்ண முடியலைன்னா, அவங்க எல்லாரையும் ரிலீஸ் பண்ணுங்க” என்று காவல்துறையையும், தமிழக அரசையும் சிம்பு வலியுறுத்தினார்.