கொல்கத்தாவில் பிளாஸ்டிக் முட்டை: பொதுமக்கள் அதிர்ச்சி! ஒருவர் கைது

Must read

கொல்கத்தா,

கொல்கத்தாவில் விற்கப்படும் கடைகளில்  பிளாஸ்டிக் முட்டை விற்பதாக தகவல்கள் பரவியதை தொடர்ந்து பொதுமக்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை அன்று, தான் வாங்கிய முட்டையில் இருந்து பிளாஸ்டிக் வருவதாக வந்த புகாரையடுத்து, பிளாஸ்டிக் முட்டை விற்பதாக  வியாபாரி ஒருவரை கைது செய்தனர்.

பிளாஸ்டிக் முட்டை குறித்து கொல்கத்தா ககேரியா காவல் நிலையத்தில் கொல்கத்தாவில் பிரபலமான பகுதியான டில்ஜாலா பகுதியைச் சேர்ந்தவர் ஒரு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

புகார் கொடுத்த பெண், முட்டை ஓடுகளை  அடுப்பில் போட்டபோது, பிளாஸ்டிக் எரிவது போன்ற வாசனை வந்ததாகவும், அந்த முட்டையை சாப்பிட்ட தனது மகனுக்கு வயிற்று  செரிமானப் பிரச்சனை ஏற்பட்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர்.

புகாரை தொடர்ந்து, முட்டை விற்ற வியாபாரி முகமது சமீன் அன்சாரியின் கடைக்குச் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அவரது கடையில் இருந்த மேலும் சில முட்டைகளை பறிமுதல் செய்து உடைத்து பார்த்தபோது, பிளாஸ்டிக் போன்ற சந்தேகத்திற்கு இடமான பொருள் இருப்பதை அடுத்து, அவற்றை சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து முகமது சமீன் அன்சாரி கைது செய்யப்பட்டார். மேலும், இதுபோன்ற முட்டை கள் வேறு கடைகளில் விற்கப்படுகிறதா என்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதுபோன்ற முட்டைகளை விற்பனை செய்த மொத்த விற்பனையாளர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே சீனாவில் இருந்து பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

தற்போது பிளாஸ்டிக் முட்டை விற்பனைக்கு வந்திருப்பது பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article