ஊரும் சமையலும்:  நெல்லை அவியல்

வ்வொரு ஊரின் சமையலுக்கும் ஒரு தனி சுவையிருக்கும். திருநெல்வேலி என்றதுமே அல்வாதான் பலருக்கும் நினைவு வரும். “அல்வாவைத் தவிர நெல்லை மண்ணுக்கே உரிய சில பிரத்யேக உணவு வகைகளும் உண்டு. எளிமையான முறையில் நாக்கில் சுவையூட்டும் பாரம்பரிய உணவுகளான அவியல் பற்றிப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்;

சேனை – 50 கிராம்

கத்தரிக்காய் – 150 கிராம்

முருங்கைக்காய் – 1

கேரட், பீன்ஸ் – தலா100 கிராம்

அவரை – 50 கிராம்

உருளை – 150 கிராம்

உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு தேவையானவை;

தேங்காய் – அரை மூடி

பச்சை மிளகாய் – 5

சீரகம் – அரை டீஸ்பூன்

சின்ன வெங்காயம் – 3

பூண்டு – 4 பல்

தாளிக்க;

தேங்காய் எண்ணெய் – 5 டீஸ்பூன்

உளுந்து, கடுகு – தலா ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை;

முதலில் காய்களை நீளமாக நறுக்கிக்கொள்ளுங்கள். ஒன்றரை டம்ளர் தண்ணீரில் அனைத்துக் காய்கறிகளையும் உப்பு சேர்த்து வேகவையுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை வேகும் காயில் கொட்டி, பச்சை வாசனை போகும்வரை வதக்கவேண்டும். பிறகு ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து, கறிவேப்பிலைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். இப்போது சுவையான அவியல் ரெடி.!

குறிப்பு;தேவையென்றால் தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Place and food : Nellai aviyal, ஊரும் சமையலும்:  நெல்லை அவியல்
-=-