சென்னை,
ன்று விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வெ.பிரபாகரனின் பிறந்த நாள். இதையொட்டி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வீட்டில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் குருதி பாசறை சார்பில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை முன் னிட்டு ரத்ததான முகாம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று நடந்தது.
முகாமை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடங்கிவைத்தார். இதில், கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்டோர் ரத்ததான முகாமில் பங்கேற்று ரத்தம் வழங்கினர்.
seeman2
இதுகுறித்து சீமான் கூறியதாவது:
பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 5 ஆண்டுகளாக இதுபோன்ற ரத்ததான முகாமை நடத்தி வருகிறோம்.
தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. என்ற இரண்டு முக்கிய கட்சிகளும் வேண்டாம் என்றே எல்லா தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட விரும்புகிறது. தனித்து போட்டியிடும்போது தான் தனித்துவமான பாதையை உருவாக்க முடியும்.
தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரண்டு கட்சிகளுமே கொள்கைகள், மக்கள் செல்வாக்கு ஆகியவை இருந்திருந்தால் தேர்தலில் பணத்தை கொடுத்து எதற்காக வாக்குகளை விலைக்கு வாங்குகிறார்கள். எங்களை போன்று நேர்மை யாக செயல்பட்டு இருக்க வேண்டும் அல்லவா என்றார்.
மேலும், நளினி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் ஒரு இனத்தின் உரிமைக்காக அனைவரும் ஒன்றிணை வதில் ஒன்றும் தவறில்லையே. அதே நேரத்தில் தேர்தல் என்று வரும்போது அவரவர்களுக்கு என்று தனித்தனி கருத்துகள் இருக்கும். அதன் அடிப்படையிலேயே கூட்டணி அமையும் என்றார்.
நாங்கள் பிரபாகரனின் பிறந்தநாள் மற்றும் பொங்கல் பண்டிகையை மட்டுமே கொண்டாடுவோம். அதனால் பிரபாகரனின் பிறந்தநாள் விழா என்னுடைய வீட்டில் பெரிய நிகழ்வாக நடக்கும் என்று கூறினார்.
இன்று சீமான் இல்லத்தில் பிரபாகரன் பிறந்தநாள் விழா நடத்த காவல்துறை தடை விதித்து உள்ளது.
இதன் காரணமாக அந்த பகுதியில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் திரண்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து போலீசாரும் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.