ஆன்மீக யாத்திரை – சபரிமலை  –  மூன்றாம்  பகுதி

திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம் (TDB) சபரிமலை சுவாமி ‎ஐயப்பன் கோவிலை சுமார் ரூபாய் 30 கோடியளவில் ($7 ‎மில்லியன்) காப்பீடு செய்து கொண்டுள்ளது. மேலும் இந்த ‎இடத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு ‎விபத்துகளில் இருந்து இலவசமாகக் காப்பீடு அளிக்கும் திட்டத்தையும் ‎அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

நீலக்கல்லில் இருந்து ‎மலையேற்றப் பாதையில் சன்னிதானம் வரை சென்றடையும் 18 ‎கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாதையில் வரும் பக்தர்களில் ‎விபத்துக்குள்ளாகி அடிபட்டோர் மற்றும் இறந்தவர்களுக்கு சுமார் ‎ஒரு லட்சம் ரூபாய் வரை இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலமாக ‎வழங்க இயலும். ‎

சபரிமலைப் பயணம் காரணமாக கேரள அரசாங்கத்திற்கு நல்ல ‎வருமானம் கிடைப்பதோடு, கேரளத்தின் பொருளாதாரத்திற்கு ‎சுமார் 10,000 கோடி ரூபாய் வரை வருமானத்தை பங்களித்து ‎வருகிறது.

சபரிமலை கோவிலில் அரவணை மற்றும் அப்பம் பிரசாதமாக ‎வழங்கப்படுகின்றன. இவை அரிசி, நெய், சர்க்கரை போன்ற ‎பொருட்களால் உருவாக்கப்படுகின்றன. சபரிமலையில் இந்தப் ‎பிரசாதத்தை செய்வதற்கான அரிசி செட்டிக்குளங்கரை தேவி ‎கோவிலில் இருந்து பெறப்படுகிறது. திருவாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் கீழ் உள்ள கோவில்களில் இக்கோவில் இரண்டாவது ‎மிகப்பெரிய கோவிலாகும். இந்தக்கோவில் மாவேலிக்கரா என்ற ‎இடத்தில் உள்ளது.‎

இரவில் கோவிலின் நடை சார்த்தப்படுவதற்கு முன்பு ‎ஹரிவராசனம் என்ற பாடல் இசைக்கப்படுகிறது. தற்காலத்தில் ‎சபரிமலையில் இறைவன் உறங்கச்செல்வதற்கு முன் ‎இசைக்கப்படும் தாலாட்டுப் பாட்டு (உறக்கப்பாட்டு), ‎ஹரிவராசனம் என்ற பாடல், ஸ்ரீ கம்பக்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச ‎அய்யர் இயற்றி இசை அமைத்ததாகும்.

ஸ்ரீனிவாச ‎அய்யர் கோவிலில், சுவாமி அய்யப்பரின் சந்நிதியில் ‎நின்றுகொண்டு, அத்தாழ பூசைக்குப் பிறகு, இந்தப் பாடலை பாடி ‎வந்தார். சுவாமி விமோசானனந்தா அவர்களின் முயற்சியால், ‎கோவிலின் தந்திரி மற்றும் மேல்சாந்தி, இப்பாடலை ஒரு ‎தாலாட்டுப்பாடலாக ஏற்றுக்கொண்டனர். இந்தப் பாடல் 352 ‎எழுத்துக்கள், 108 சொற்கள் மற்றும் 32 வரிகள் கொண்டதாகும் (8 ‎செய்யுள் பத்திகள்).

அநேக புகழ் பெற்ற பாடகர்களால் பாடப்பெற்ற இந்தப்பாடலின் ‎பதிப்புகள் இருந்தாலும், கோவில் நடையில் கே. ஜே. யேசுதாஸ் ‎பாடிய பாடலே ஒலிபரப்பப்படுகின்றது. அச்சமயம் பக்தர்கள் மட்டுமல்லாது அரசுப் பணியில் ஈடுபட்டிருப்போரும், வணிகத்தில் ஈடுபட்டுள்ளோரும் எழுந்து நிற்கிறார்கள். பாரம்பரிய இராக தாளத்துடன் இப்பாடல் இசையமைக்கப்பட்டுள்ளது. ஒரு தேசிய கீதம் இசைக்கப்படும்போது தரப்படும் மரியாதை, இப்பாடல் ஒலிபரப்பப்படும்போதும் தரப்படுகிறது.

(will meet once again at fourth and final part)

To read previous pats see https://patrikai.com/pilgrim-yathra-to-sabarimalai-second-part/ and

click https://patrikai.com/pilgrim-yathra-to-sabarimalai-first-part/