மொபைல் காலர் டியூனில் கொரோனா விழிப்புணர்வை நீக்க கோரி நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் மனு

Must read

புதுடெல்லி:
மொபைல் காலர் டியூனில் கொரோனா விழிப்புணர்வை நீக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த, சமூக ஆர்வலரான ராகேஷ் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், மொபைல் போன், ‘காலர் ட்யூன்’களில், அமிதாப் பச்சன், கொரோனா தடுப்பு குறித்து பேசுவது ஒலிக்கிறது. அமிதாப் பச்சன் உள்ளிட்ட அவர் குடும்பத்தினர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். மேலும், இந்த பிரசாரத்திற்கு அமிதாப்பிற்கு, மத்திய அரசு பணம் வழங்குகிறது. இதற்கு தன்னார்வலர்களை பயன்படுத்தினால் இந்த செலவு குறையலாம் என்றும், இந்த காலர் டியுனை நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த, உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை, ஜனவரி 18ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

More articles

Latest article