பான்மசாலா விளம்பரத்தில் நடித்ததற்காக மன்னிப்பு கோரும் ஜேம்ஸ்பாண்ட் நடிகர்

Must read

கோல்டன் ஐ, டுமாரோ நெவர் டைஸ், டை அனதர் டே உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களில் ஜேம்ஸ்பாண்ட் 007 ஆக தோன்றிய பியர்ஸ் ப்ராஸ்னன் இந்தியாவின் பான்மசாலா விளம்பரத்தில் தோன்றியதற்காக மிகுந்த வருத்தம் அடைந்திருக்கிறார்.

pierce

புற்றுநோய்க்கு காரணமான பான்மசாலா விளம்பரத்தில் நடித்திருப்பது தனக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்ப்படுத்தியிருப்பதாகவும், இது சுவாச புத்துணர்ச்சிக்கான தயாரிப்பு என்று சொல்லித்தான் என்னை நடிக்க வைத்தனர். இது பான்மசாலா என்று அறிந்த பின்னர் இதில் நடித்ததற்காக மிகவும் வேதனையும், மன உளைச்சலையும் அடைந்ததாக அவர் தெரிவித்தார்
மேலும் புற்றுநோயால் தனது சொந்த வாழ்க்கையில் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும், தனது முதல் மனைவி, குழந்தைகள், நண்பர்கள் என பலரை புற்றுநோய்க்கு பறிகொடுத்துள்ளதாகவும், தனது படத்தை உடனடியாக விளம்பரத்திலிருந்து நீக்க சம்பந்தப்பட்ட உரிமையாளார்களிடம் கோரியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தான் இந்திய மக்களை மிகவும் நேசிப்பதாகவும், இவ்விளம்பரத்தில் நடித்ததற்காக தாம் இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article