அதிபர் வேட்பாளர் டிரம்ப், காம வெறியர்!: ஆபாசப்பட நடிகை புகார்

Must read

நியூயார்க்:
மெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாகப் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் பெண்களை இழிவுபடுத்துவதாகவும், ஏராளமான பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாகவும் சராமரி குற்றச்சாட்டுகள்  எழுந்துவருகின்றன.  இதனால், டிரம்ப் மீதான பொதுமக்கள் ஆதரவு குறைந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப் பட நடிகை ஒருவர், டொனால்டு டிரம்ப் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
00ஜெஸிகா டிரேக் என்ற 42 வயதாகும் ஆபாசப் பட நடிகை இதுபற்றி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது:
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, சில ஆண்டுகளுக்கு முன்பாக, நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அங்கு, லிப்டில் சென்றபோது, என்னுடன் டிரம்ப் வந்தார். திடீரென என்னைக் கட்டித் தழுவி, உடல் உறுப்புகளை தடவி, முத்தமும் கொடுத்தார். அதிர்ச்சியில்  எனக்கு என்ன  செய்வதென்றே தெரியவில்லை. பதட்டத்துடன் எனது அறைக்குச் சென்றேன்.
அப்போது டிரம்ப் உதவியாளர் என்று கூறி, ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். 10,000 டாலர்கள் தருவதாகவும், உடனே, டிரம்ப் அறைக்கு வரவேண்டும் என அவர் கூறினார். ஆனால், நான் மறுத்துவிட்டேன். சில நிமிடங்களில், டொனால்டு டிரம்ப் நேரில் வந்து, எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று கூறி, மிகவும் வற்புறுத்தி என்னை
அழைத்தார்.
நான் தொடர்ந்து மறுப்பு தெரிவித்தேன். பிறகு டிரம்ப்,  இரவு உணவு மட்டும் சாப்பிட்டுவிட்டுச் செல்லும்படி வற்புறுத்தினார். அதற்கு மட்டும் நான் சம்மதம் தெரிவித்தேன்.
இவ்வாறு ஜெஸிகா டிரேக் கூறியுள்ளார்.
ஏற்கனவே, பத்துக்கும் அதிகமான பெண்கள், டொனால்டு டிரம்ப் மீது பாலியல் புகார் தெரிவித்ததோடு, வீடியோ ஆதாரங்களையும்  வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில், ஆபாசப் பட நடிகையின் புகார், அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரணம், அமெரிக்க மக்கள், தங்களது தலைவர் மிகவும் நன்னடத்தை கொண்டவனாக இருக்க வேண்டும் என்று விரும்புவர். டிரம்ப் நடத்தை குறித்து தொடர்ந்து மோசமான தகவல்கள் வெளியாவதால்  அவருக்கான ஆதரவு சரிந்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

More articles

Latest article