உடல் பரிசோதனை: சோனியா காந்தி மீண்டும் வெளிநாடு பயணம்

Must read


டில்லி,

கில இந்திய  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு புறப்பட்டு சென்றார். ஏற்கனவே உடல்நலமில்லாமல் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த, தற்போது மீண்டும் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வாரணாசி தொகுதியில் நடைபெற்ற பிரசார பேரணியில் கலந்து கொண்டதுபோது அவருக்கு திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

உடனடியாக டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன் காரணமாக சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாமல் தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு, சிகிச்சை பெற மீண்டும்  வெளிநாட்டுக்கு கிளம்பி சென்றார்.

இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் இருந்து கூறும்போது, இது வழக்கமான பரிசோதனைதான் என்றனர்.

More articles

Latest article