போபால்,

த்திய பிரதேசத்தில் கணவனை இழந்த பெண்கள், விதவை என்று அழைக்கப்படுவதற்கு பதில் இனி ‘கல்யாணி’ என அழைக்கப்படுவார்கள் என்று அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

கணவனை இழந்த பெண்கள் விதவை என்றே அழைக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அழைப்பது அவர்களுக்கு அசௌகரியத்தை கொடுப்பதாக உணரப்பட்டது.

இந்நிலையில், ம.பி. முதல்வர், கணவனை இழந்த பெண்கள் இனி விதவை என்று அழைக்கப்பட மாட்டார்கள் என்று கூறி உள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் கணவனை இழந்த பெண்கள், வித்வா (vidhwa) என்று அழைக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன்தினம்  சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அப்போது,  கணவனை இழந்த பெண்கள் இனி கல்யாணி என்று அழைக்கப்படுவார்கள் என்று கூறினார். மேலும் அரசு தொடர்பான அனைத்து ஆவணங்களிலும் விதவைகள், இனி கல்யாணி என்றே குறிப்பிடப்படுவர் என்றும் அவர் கூறினார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் அர்ச்சனா சிட்னிஷ், பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகள சிவராஜ் சிங் சவுஹான் அரசு எடுத்து வருவதாகவும் கூறினார்.