கடந்த வியாழக்கிழமையில் இருந்து பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பெட்ரோல் பங்கு டீலர்கள் வரும் நவம்பர் 15-ஆம் தேதி நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

petrol

மேலும் பெட்ரோல் பங்குகள் சனிக்கிழமை குறிப்பிட்ட நேரங்களே இயங்கும் எனவும், ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இயங்காது எனவும், நாடுமுழுவதும் வரும் நவம்பர் 15-ஆம் தேதி 54,000 பெட்ரோல் பங்குகள் ஒருநாள் வேலைநிறுத்தத்தை கடைப்பிடிக்கப் போவதாகவும் இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தெலுங்கானாவில் மட்டும் 1,400 டிரக்குகள் நிறைய பெட்ரோல் மற்றும் டீசல்கள் கொள்முதல் செய்யப்படாமல் இருப்பதாகத் தெரிகிறது. பெட்ரோல் பங்குகள் இனி அரசு வேலைநேரமான காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்கும் எனவும், ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இயங்காது எனவும், தங்கள் குரலுக்கு அரசு செவி சாய்க்காவிட்டால் வரும் நவம்பர் 15-ஆம் தேதி நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகயும் இக்கூட்டமைப்பின் இணைச் செயலர் ராஜீவ் அமரம் தெரிவித்துள்ளார்.