சென்னை:
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தலா 76 காசுகள் அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டுகிறது.