சென்னை

சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளன.

இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்குச் சர்வதேச கச்சா  எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தினசரி விலையை மாற்றி அமைக்க மத்திய அரசு உரிமை அளித்துள்ளது.   அதன்படி எண்ணெய் நிறுவனங்கள் தினசரி விலையை மாற்றி அமைக்கின்றன.

சென்ற வருடம் கொரோனா காரணமாகக் கச்சா எண்ணெய் விலை கடுமையாகக் குறைந்தது.    ஆயினும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏதும் அறிவிக்கப்படவில்லை.   பிறகு மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கப்பட்டன.   கடந்த சில நாட்களாகக் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.

இதனால் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து புதுப்புது உயரங்களை எட்டி வருகின்றன.  இன்று சென்னையில் பெட்ரோல் விலை ;ஒட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.104.52க்கு விற்கப்படுகின்றது.  இதைப் போல் டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து ரூ/100.59க்கு விற்பனை செய்யப்படுகிறது.