சென்னை

ன்று 8 ஆம் நாளாக தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது.

இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்க்ன்ரன.   ஊரடங்கு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் உபயோகம் வெகுவாக குறைந்திருந்தது.

அந்த கால கட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இன்றி காணப்பட்டது.   அப்போது கச்சா எண்ணெய் விலை நெகட்டிவில் சென்ற போதிலும் விலை குறைக்கப்படவில்லை.    இந்நிலையில் தற்போது ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு போக்குவரத்து அதிகரித்துள்ளது.

கடந்த 7 ஆம் தேதி அன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தது.  அதன்பிறகு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து தினசரி உயர்ந்து வருகிறது.  தொடர்ந்து 8 ஆம் நாளாக இன்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 54 காசுகள் உயர்ந்து சென்னையில் லிட்டர் ரூ. 79.53க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இதைப் போல் டீசல் விலையும் 54 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ.72.18 என விற்பனை செய்யப்படுகிறது.