யூரநாதசுவாமி திருக்கோவில், விருதுநகர் மாவட்டம் பெத்தவநல்லூரில் அமைந்துள்ளது.

மிகவும் பழமையான இந்தக் கோயில் ஓர் பிரார்த்தனை ஸ்தலாமாகும். குழந்தைப் பெறப் போகும் தாய்மார்கள் இக்கோயிலுக்கு வந்து மாயூரநாதரை வேண்டிக் கொண்டால், சிவநேசி என்ற பெண்ணுக்கு புத்திரப்பேறு பெற உதவியது போல் அனைத்து தாய்மார்களுக்கும் தானே உதவிடுவார்.இந்த சிவாலயத்தின் உள்ளே நுழைந்ததுமே விநாயகர், முருகன், பிரம்மா, விஷ்ணு, சிவன், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என அனைவருமே நம்மை ஆசிர்வதிப்பது போன்ற அமைப்பு.

ஸ்தல விநாயகர் கன்னி முலையில் இருந்தபடியே அருள்பாலிக்கிறார். கிழக்கு பார்த்து அமைந்த இந்த சிவலாயத்தில் நந்தி தேவரை வணங்கி விட்டு மாயூர நாதரை தரிசிக்க செல்வோம். இந்த உலகிற்கே நான்தான் தலைவன் என்பது போன்ற ராஜஅலங்காரத்தில் இறைவன் காட்சி தருகிறார்.

ஆமையானது சிவனின் ஆபரணத்தில் ஒன்று. மேலும் தண்ணீரில் இருக்கும் வரை ஆமை நன்றாக சுற்றித்திரியும். ஆனால் கரைக்கு வந்தவுடன் தன் உடலை ஓட்டிற்குள் அடக்கி அமைதியாகி விடும்.