சென்னை: தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் தமிழகஅரசுக்கு அறிவுறுத்தி உள்ள நிலையில்,  சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்  அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.அதே வேளையில் நாடு முழுவதும் தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக, ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.  இந்த சூழலில் தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்து கட்சிக்கூட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தலைமை செயலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஆக்சிஜன் பற்றாக்குறை பற்றியும் ஆலோசனை நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய அனுமதிக்குமாறு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், பொதுமக்கள் கருத்து குறித்து ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தமிழகஅரசு பிரம்மான பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதி மன்றம் அறிவித்துள்ளதால், அது தொடர்பாக விவாதிக்க, அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் திமுக பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் எம்.பி.கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.