முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு பெரியார் விருது…வைரலாகும் புகைப்படம்

சென்னை:

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு தந்தை பெரியார் விருது அறிவிக்கப்பட்டிருப்பது சமூக வலை தளங்களில் காமெடியாகி வருகிறது.

தமிழக அரசின் இலக்கிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 9 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு வரும் 16ம் தேதி கலைவாணர் அரங்கில் முதல்வர் பழனிச்சாமி விருதுகளை வழங்குகிறார்.

இந்த விருது பட்டியலில் தந்தை பெரியார் விருது முன்னாள் அதிமுக அமைச்சர் பா.வளர்மதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பலருக்கும் இது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த அறிவிப்பு சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

இதில் வளர்மதி கோவில் வேண்டுதலின் போது அக்னி சட்டி தூக்கி வரும் புகைப்படத்தை வெளியிட்டு பெரியார் விருதுக்கு தேர்வு என்று தலைப்பிட்டுள்ளனர்,
English Summary
Periyar Award for Ex-Minister P.Varlarmathi photo become viral