வேலூர்:  ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன், உடல்நலம் பாதிப்பு என கூறி, வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது அவரது பரோலை  நீட்டிக்கும் நாடகம் என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுவிக்க வேண்டும் என காங்கிரஸ் தவிர மற்ற அனைத்துக்கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், அதை ஏற்க மத்தியஅரசு மறுத்து வருகிறது.

பேரறிவாளனுக்கு 5வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு…!

இதற்கிடையில், பேரறிவாளன் உள்பட சில கைதிகள், பல்வேறு காரணங்களுக்காக அவ்வப்போது பரோல் கேட்டு வெளியே வந்து செல்கின்றனர்.  இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், பேரறிவாளனுக்கு தொடர்ந்து 6 மாதங்கள் பரோல் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வரும் பேரறிவாளன், இன்று திடீரென  வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அவருக்கு உடல்நலப் பாதிப்பு என்றும், பேரறிவாளனுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றுள்ளதாகவும்,  மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் பேரறிவாளனுக்கு சிடி மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் – பரோல் நீட்டிக்கும் நாடகம்…?

ஆனால், பேரறிவாளன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, நாடகம் என்றும், அவர் பரோலை மேலும் நீட்டிக்கவே உடல்நலம் பாதிப்பு என்று நாடகமாடுவதாக சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒவ்வொரு முறையும் அவர் மருத்துவமனை செல்வதும், அவரது பரோல் நீட்டிக்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க அதிமுக அரசுக்கு துணிச்சல் இல்லை: ஆர்.எஸ்.பாரதி

தற்போது, 6வது முறையாக மீண்டும் பரோலை  நீட்டிக்கும் வகையில், அவர் நாடகமாடுவதாகவும், இதற்கு மாநில அரசும் துணைபோவதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதிமுக ஆட்சியின்போது பேரறிவாளன் பரோலுக்கும், 7 பேர் விடுதலைக்கும் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்த காங்கிரஸ் தலைமை, தற்போது பேரறிவாளன் தொடல் பரோல் விஷயத்தில் மவுனம் சாதிப்பதும், காங்கிரஸ் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜீவ் குறித்து சீமான் பேசியதற்கு கொந்தளிக்கும் காங்கிரசார், ராஜீவ்கொலை குற்றவாளி விஷயத்தில் அமைதி காப்பது அதிர்ச்சி அளிக்கிறது.