தமிழருக்கு மத அடையாளமே இல்லை என்பதை கீழடி நிரூபித்துள்ளது! வரலாற்று அறிஞர்கள் கருத்து

Must read

சென்னை: தமிழருக்கு மத அடையாளமே இல்லை என்பதை கீழடி நிரூபித்துள்ளது என வரலாற்று அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சி சீமான், திராவிடத்தை கடுமையாக சாடியதுடன், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் தாய்மாதம் திரும்புங்கங்கள் என்று அழைப்பு விடுத்தார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. திராவிட ஆதரவாளர்கள் வரிந்துகட்டிக்கொண்டு, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சீமானை பாஜகவின் பி.டீம் என்றும், சங்கி என்றும் திமுகவினரும்,  அதன் கூட்டணி கட்சியினரும் விமர்சித்து வருகின்றனர். இந்து என்பதை ஏற்றுக்கொண்டாலே சமத்துவத்துக்கு எதிரானவர்கள் என பொருள். தாய்மதம் திரும்புதல் என்றாலே, பெண்விடுதலைக்கு எதிரானவர்கள் என குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகிறது. சீமான் ஒரு பாஜக அடிவருடி தரம்தாழ்ந்து விமர்சித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி .

ஆனால், சீமானோ,  ‘’என்னை பார்த்து ஏன் பதற்றம் அடைகிறார்கள்.   எல்லோரும் என்னை திட்டுகிறார்கள்.  காரணம் என்ன… நான் குண்டு வைத்தேனா? கொள்ளை அடிச்சேனா? நிலத்தை ஆக்கிரமிச்சேனா? நான் சிவனே என்று காட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.   வரலாற்றில் முதன்முதலாக ஒரு எதிரியை சந்தித்து விட்டார்கள்.  அது பக்கத்தில் இருந்த ஒருவன் என்பதால்  பயம். வேறொரு ஆளாக இருந்தால் இந்த பயம் இருக்காது’’ பதிலடி கொடுத்துள்ளார்.

ஆனால், அவரது கருத்தை மறுக்கும் வகையில், கீழடி ஆய்வுகள் உள்ளதாக அறிஞர்களும், ஆய்வாளர்களும் கூறி வருகின்றனர். தமிழ் இந்து என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்களில் கலந்துகொண்ட பலர், தமிழருக்கு  மத அடையாளமே இல்லை என்பதை கீழடி அகழ்வாய்வுகள் நிரூபித்து இருப்பதாக கூறியுள்ளனர்.

ஆனால், அதே கீழடியில்தான், பள்ளிச்சந்தை திடலில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்களிடையே சுமார் பதினெட்டு மட்பாண்டச்சில்லு களில் தமிழ்-பிராமி எழுத்துருக்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.  அச்சில்லுகளில் வேந்தன், சேந்தன் அவதி, திசன் , சந்தன், சாத்தன், மடைசி, எரவாதன், உத்திரை, ஆதன், முயன், இயனன்,  குவிரன், குலவன், உலசன், கோதை, வணிகப்பெருமூவர் உண்கலம், போன்ற தமிழ் மற்றும் பிறமொழிச் சொற்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

கொடுமணல், அழகன்குளம் ஆகிய இடங்களில் கிடைத்த எழுத்தின் மாதிரிகளை வைத்து தமிழ் பிராமி எழுத்தின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போது கீழடியில் ஒரு பானை ஓட்டில் எழுத்துகளை வைத்து தமிழ் பிராமி கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே வழக்கத்தில் இருந்திருக்கலாம்; ஆகவே 2,600 ஆண்டுகளுக்கு முன்பாக கீழடியில் வாழ்ந்தவர்கள் எழுத்தறிவு பெற்றிருக்கக்கூடும் என்றும் தொல்லியல் துறை தெரிவித்தது.

ஆனால், இந்தியர்களிடையே, குறிப்பாக  தமிழர்களிடையே எழுத்தறிவை கற்பித்தது, கிறிஸ்தவர்கள் என்ற  ஒரு போலியான தோற்றத்தை ஒருசாரார் பரப்பி வருகின்றனர்.

மதத்திற்காக குரல் கொடுப்பவர்கள், தமிழன் 2600 ஆண்டுகளுக்கு முன்கே எழுத்தறிவு பெற்றவன் என்பதை உலகுக்கு தெரிவிக்கவும், அதை பிரபலப்படுத்தவும் , கிறிஸ்தவர்களுக்கு பதிலடி கொடுக்கவும் எந்தவொரு அறிஞர்களும், ஆய்வாளர்களும்  முன்வருவதில்லை என்பது ஆச்சரியமாக்கதான் இருக்கிறது.

பண்டைய தமிழன் கட்டிட கலையிலும், நீர் மேலாண்மையிலும், தமிழ் எழுத்துக்களையும் உருவாக்கியதுடன், அவர் கல்வியறிவு பெற்றவன் என்று கீழடி ஆய்வுகள் உறுதி செய்யப்பட்டிருக்கும்போது, மதத்தைக்கொண்டு அரசியல் செய்வது அநாகரிகமானது.

More articles

Latest article