அகமதாபாத்:

உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற பெப்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.


கடந்த 1989-ம் ஆண்டு பெப்சி நிறுவனம் லேஸ் சிப்ஸ் உற்பத்தி ஆலையை தொடங்கியது. எஃப்சி 5 ரக உருளைக்கிழங்கை விவசாயிகளிடம் அளித்து, ஒப்பந்தம் முறையில் வாங்கிவந்தது.

இந்நிலையில், தங்கள் நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ள எஃப் 5 ரக உருளைக் கிழங்கை குஜராத்தைச் சேர்ந்த 9 விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

அவர்கள் தங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடாக தரவேண்டும் என்று நீதிமன்றத்தில்  பெப்சி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

விவசாயிகள் மீது கார்பரேட் நிறுவனம் வழக்கு தொடர்ந்ததை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், பெப்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுடன் கலந்தாலோசித்தபின், 9 விவசாயிகள் மீதான வழக்கை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.