டில்லி:

நாட்டை ஆள உறுதியான அரசுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்  என்று பிரதமர் மோடி மாநிலங்களவையில் கூறினார். குடியரசு தலைவர் உரை மீதான விவாதங்கள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதில் தெரிவித்து  காரசாரமாக உரையாற்றினார்.

நாட்டில்,  நீண்ட நாட்களுக்குப் பின் ஆட்சி நடத்திய கட்சி முழுப்பெரும்பான்மை உடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நாட்டை ஆள  உறுதியான அரசுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளதாக கூறினார்.

மேலும், தற்போதெல்லாம் வாக்காளர்கள் மிக மிக விழிப்புணர்வோடு இருக்கிறார்கள். அவர்கள் நாட்டில் என்ன நடக்கிறது, பாராளுமன்றத்தில் என்ன பேசுகிறார்கள். மக்களவையில் மட்டுமல்ல, மாநிலங்களவையிலும் என்ன நடக்கிறது என்பதை அறிந்துள்ளார்கள். அதையெல்லாம் நினைவில் வைத்தே தேர்தலில் மக்கள் வாக்களித்து பாஜகவை வெற்றிபெற வைத்துள்ளார்கள்.

ஆனால்,  காங்கிரஸ் நண்பர்களால், தோல்வியை  ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது ஜனநாயகத் தில் ஒரு ஆரோக்கியமான  விஷயம் கிடையாது என்றவர்,  விவசாயிகளுக்கு ரூ.2000 வழங்குவதாக அறிவித்த பாஜகவின்  திட்டத்துக்காகத்தான் விவசாயிகள் வாக்களித்ததாகக் கூறுவது, விவசாயிகளை அவமதிப்பதாகும். காங்கிரசாரின் இந்த செயலை கட்டு  நான் கடுமை யாக அதிர்ந்து விட்டேன் என்றவர், அவர்கள் ஊடகங்களையும் விட்டு வைக்கவில்லை.

ஊடகங்களால் தான் பாஜக வென்றது என்று கூறி வருகிறார்கள்… அப்போ…. ஊடகங்கள்  எல்லாம் விற்பனையாகி விட்டதா? அப்போது தமிழ்நாடு, கேரளாவில் என்ன நடந்தது? என்று கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் தோற்றுவிட்டது என்றால் அதற்காக இந்தியா தோற்றுவிட்டது, ஜனநாயகம் தோற்று விட்டது என்கிறார்கள். அப்படியென்றால், வயநாட்டில் இந்தியா தோற்றுவிட்டதா? ரேபரேலியில் இந்தியா தோற்றுவிட்டதா? திருவனந்தபுரத்தில் இந்தியா தோற்றுவிட்டதா? என்ன விதமான வாதம் இது? என்று எதிர்க்கட்சியினருக்கு கேள்வி விடுத்தார்.

கடந்த  1950ம் ஆண்டுக்குப் பிறகு நமது தேர்தல் நடைமுறை நன்கு மேம்பட்டு உள்ளதாக கூறியவர்,  ஆரம்ப காலத்தில், வாக்குப்பதிவு அதிக நேரம் நடைபெற்றது என்றும், அப்போதுன்,  வாக்குப்பெட்டி கைப்பற்றுதல், வன்முறை  போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்ற தாகவும்,. ஆனால் இப்போது அப்படி கிடையாது, ஒர  குறிப்பிட்ட நேரத்தில் எவ்வளவு வாக்குகள் பதிவானது என்பது கூட செய்தியாகும் அளவுக்கு நிலைமை மாறி உள்ளது… இதை  வரவேற்க வேண்டும்.

இவ்வாறு மோடி காரசாரமாக பேசினார்.