சென்னை:

“மழையால் மக்களின் மாமூல் வாழ்க்கை பாதிக்கப்படவில்லை” என்று தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.

தமிழக கடலோர மாவட்டங்களில்.. குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்க முடியவில்லை. பல இடங்களில் மின்சாரம் தடை செய்யப்பட்டிருக்கிறது.

இது போன்ற பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறி வருகிறார்கள்.

முக்கிய சாலைகள் பல மழை நீர் காரணமாக ஆறு போல் ஆகிவிட்டன. சுரங்க பாலங்கள் பல நீரினால் மூழ்கிவிட்டன.  இதனால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தண்டவாளங்களில் நீர் தேங்கியுள்ளதால், சென்னை பீச் முதல் தாம்பரம் வரையில் ரயில்கள் குறைக்கப்பட்டு அரை மணி நேரத்துக்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில், “மழையால் மக்களின் மூமூல் வாழ்க்கை பாதிக்கப்படவில்லை” என்று வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “மழை பெய்திருக்கிறது.. நிவாரண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு எந்தபாதிக்கும் இல்லை. மாமூல் வாழ்க்கை பாதிக்கப்படவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் கருத்து மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.