சென்னை:

திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக செயல்தலைவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழக அரசை பலமுறை வற்புறுத்திய பிறகே சட்டசபை கூட்டுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  மானியக்கோரிக்கைகளை விவாதிக்க இப்போதாவது சட்டசபையை கூட்டியிருக்கிறார்களே என்பது மகிழ்ச்சி.

மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இப்போது உள்ள சூழ்நிலையில், அதிமுகவில் பிரச்சினை அதிகரித்துள்ளது. இதையெல்லாம் பார்க்கும் போது  சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடக்குமா என சந்தேகம் எழுந்தது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்ட போதே சட்டசபையைக் கூட்டியிருக்க வேண்டும். ஆனால், அப்போது கூட்டாமல்,  நாங்கள் பலமுறை  வலியுறுத்திய பின்னரே கூட்டம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திமுக எப்போதுமே மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்கும் என்றும் இந்த அரசு விரைவில் கவிழும், இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது,  விரைவில் தமிழகத்தில் தேர்தல் நடைபெறும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.