ஸ்ரீநகர்

காஷ்மீரில் இருந்து வெளியேறிய காஷ்மீரி பண்டிட் இனத்தவர் ஒருவர் மீண்டும் திரும்ப குடிவந்துள்ளார்.

 

 

காஷ்மீர் பண்டிட்கள் என அழைக்கப்படுபவர் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த அந்தணர்கள் ஆவார்கள்.   கடந்த 1587 ஆம் வருடம் முகலாய மன்னர் அக்பர் காஷ்மீர் பகுதியை கைப்பற்றினார்.    அப்போது இவர்களின் அறிவுத் திறமையால் கவரப்பட்டு இவர்களுக்கு பண்டிட் (பண்டிதர்) என்னும் பட்டத்தை வழங்கினார்.   அத்துடன் விவசாய நிலங்களையும் அரச பதவிகளையும் அளித்தார்.

கடந்த 1950 ஆம் வருடம் கொண்டு வரப்பட்ட நில சீர்திருத்த சட்டத்தினால் இவர்கள் தங்கள் நிலத்தை இழந்தனர்.   அத்துடன்  காஷ்மீரில் பிரிவினைவாதிகள் அதிகரித்ததால் இவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உண்டாகியது.   இதனால் 1990 ஆண்டில் காஷ்மீரை விட்டு வெளியேறிய இவர்கள் டில்லி உள்ளிட்ட நகரங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

 

இந்நிலையில் காஷ்மீரி பண்டிட் இனத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் மீண்டும் ஸ்ரீநகருக்கு குடி புகுந்துள்ளார்.   இவர் தனது வர்த்தகத்தை மீடும் பழைய ஸ்ரீநகர் பகுதியில் தொடங்கி உள்ளார்.   ஏற்கனவே இவர் இங்கு கடை வைத்திருந்தவர் ஆவார்.  இவருக்கு இங்குள்ள மக்கள் வரவேற்பை தெரிவித்துள்ளனர்.