அஹமதாபாத்:

பாஜகவில் இணையும் மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ.க்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ஹர்திக் பட்டேல் காட்டமாக கூறியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதாயம் கருதி பாஜகவுக்க தாவ முயற்சித்து வருகின்றனர். அங்கு  வரும் 19ந்தேதி அன்று ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. காலியாக உள்ள 4 இடங்களில் பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு தலா 2 இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில்,  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆக்சே படேல், ஜிது சவுத்ரி மற்றும் பிரிஜேஷ் மெர்ஜா ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்களின் பலம் 65ஆக குறைந்தது.

இந்த அரசியலுக்கு பின்னணியில்  ல் பா.ஜ.க. உள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹர்திக் பட்டேல்,  கடந்த ஒரு மாத காலமாக மாநிலத்தில் பா.ஜ.க. குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது. அவர்கள் ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடி வரை செலவிட்டுள்ளார்கள். அவர்கள் அந்த பணத்தை வெண்டிலேட்டர் வாங்க செலவிட்டு இருந்தால் சில உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்.

பணத்தின் மீதான பேராசை காரணமாக, சமானிய மக்களை மோசடி செய்த அவர்கள் (காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்) அங்கு (பா.ஜ.க.) சென்று இருக்கலாம் என நான் நம்புகிறேன். மக்கள் அவர்களை செருப்புகளால் அடிக்க வேண்டும். ராஜ்யசபாவில் பெரும்பான்மையை பெற பா.ஜ.க. முயற்சி செய்கிறது. நாங்கள் 2 ராஜ்ய சபா இடங்களில் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஹர்திக் பட்டேலின் காட்டமான பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மையாக  வசிக்கும் பட்டேல் இனத்தலைவரான ஹர்திக் பட்டேல், குஜராத் சட்டமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னர், அபோதைய  அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில், கடந்த ஆண்டு (2019) மார்ச் 12ந்தேதி  காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.