அதிகார ஆசையால் வீழ்ந்த ஆம்ஆத்மி: அன்னா ஹசாரே சுருக்!

Must read

People realised that AAP are hungry for power: Anna Hazare on MCD results

டெல்லியில் ஆம்ஆத்மி தோல்வியடைந்ததற்கு அக்கட்சியினரின் அதிகார ஆசையே காரணம் என அன்னா ஹசாரே விமர்சித்துள்ளார்.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான ரலேகான் சித்தியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

டெல்லியில் ஆட்சிக்கு வந்த ஆம்ஆத்மி கட்சியினர் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளின் படி நடந்து கொள்ளவில்லை. அரசின் பங்களாக்கள், வாகனங்களையெல்லாம் பயன்படுத்த மாட்டோம் எனத் தெரிவித்தனர். ஆனால், கெஜ்ரிவால் அவற்றைப் பயன்படுத்தினார். டெல்லி மக்கள் இவர்களிடம் நிறைய எதிர்பார்த்தார்கள். அவற்றை இவர்கள் நிறைவேற்றவில்லை. ஆட்சியில் இருந்த டெல்லியின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் என இவர்கள் கவனம் சிதறியது. இவர்களுக்கு அதிகார ஆசை இருப்பதை மக்கள் அறிந்து கொண்டனர். அதன் விளைவே இந்தத் தோல்வி.

இவ்வாறு ஹசாரே தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே தொடங்கிய இயக்கத்தில், அரவிந்த் கெஜ்ரிவாலும், தற்போது பாஜவில் ஐக்கியமாகி புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருக்கும் கிரண்பேடியும் முக்கியமான தலைவர்களாக பங்காற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.  அதுவே இருவரது அரசியல் வாழ்க்கைக்கும் அடித்தளமாகவும் அமைந்து விட்டது.

More articles

Latest article