பாஜக.வை ராஜஸ்தான் மக்கள் நிராகரித்துள்ளனர்….ராகுல்காந்தி

Must read

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர், ஆல்வார் லோக்சபா தொகுதிகளுக்கும், மண்டல் கர்க் சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இங்கு பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

இந்த 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பா.ஜ.க அளும் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றி குறித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘ ராஜஸ்தான் காங்கிரஸ் நல்லதொரு பணியை ஆற்றியுள்ளது. ஒவ்வொருவரையும் நினைத்து பெருமைப்படுகிறேன். இதன் மூலம் ராஜஸ்தான் மக்கள் பாஜக.வை நிராகரித்துள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார்.

More articles

Latest article