மத்திய அரசு பழைய ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று திடீரென்று அறிவித்ததையடுத்து ஏடிஎம் மற்றும் வங்கிகளில் வரிசையில் நிற்கும் மக்கள் பலர் உயிரிழந்து வரும் சம்பவம் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணை தலைவர் டாக்டர் வினய் சகஸ்ரபுத்தேயிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு,, அவர் ரேஷன் கடை க்யூவில் கூடத்தான் மக்கள் சாகிறார்கள். நாட்டின் நலன் கருதி அரசு எடுக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு மக்கள் துணைநிற்க வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்தார். அலட்சியமாக அவர் தெரிவித்துள்ள கருத்து கடுமையான விமர்ச்சங்களை எழுப்பியுள்ளது.

drvinay

வினோத் பாண்டே என்ற ஓய்வு பெற்ற 69 வயது நபர் யூனியன் வங்கி வாசலில் விழுந்து இறந்தார். மத்திய பிரதேசத்தில் மட்டும் வங்கியின் வாசலில் வரிசையில் நின்ற மூன்று பேர் இறந்திருக்கிறார்கள். அதுமட்டுமன்றி வெகுநேரம் வரிசையில் நின்ற பின்பு வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள் திடீரென்று பணம் காலியாகிவிட்டது என்ரு சொல்லி ஷட்டரை மூட அவ்வளவு நேரம் காத்துக் கிடந்தவர்கள் ஏமாற்றமாக திரும்ப வேண்டியதாயிருக்கிறது.
இது குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு கருத்து தெரிவித்த சகஸ்ரபுத்தே இது கறுப்பு பணத்துக்கு எதிராக பிரதமரின் சத்யாகிரகம். எனவே மக்கள் இதனால் ஏற்படும் சிரமங்களை தாங்கிக்கொண்டு தாங்களும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக செயல்படவேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
பிரதமரின் சத்யாகிரகத்தால்(!) வங்கி வாசலில் மக்கள் செத்து விழுகிறார்களே என்று கேட்டதற்கு, ரேஷன்கடை க்யூவில்கூடத்தான் மக்கள் சாகிறார்கள் என அலட்சியமாக பதிலளித்து நிருபர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் ஷரபுத்தே.
இதையடுத்து இந்த பழைய நோட்டு தடையினால் ஏற்பட்ட பல மோசமான விளைவுகள் பற்றி நிருபர்கள் கேட்ட மேலும் பல கேள்விகளுக்கு அவரால் பதிலளிக்க இயலவில்லை. கடைசியில் இதெல்லாம் பிரதமரின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட கறுப்புப்பண முதலைகள் பிரதமரின் நற்பெயருக்கு களங்கள் விளைவிக்கும் வகையில் புனையும் கட்டுக்கதைகள் என்று சொல்லி பேச்சை முடித்துக்கொண்டார்.