கொடைக்கானலில் குழிப்பேரி விளைச்சல் தந்துள்ள நிலையில், கிலோ ரூ. 40க்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுவதால், விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
தமிழில் ‘குழிப்பேரி’ என்று அழைக்கப்படும் பீச்சஸ் பழங்கள், ஆப்பிள் பழம் போன்று தோற்றமளிக்கும். இப்பழமானது ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் விளைச்சல் செய்யப்படும். கொடைக்கானல் அருகே செண்பகனூர், வில்பட்டி, பள்ளங்கி, அடிசரை, மாட்டுப்பட்டி, பூம்பாறை உள்ளிட்ட பல மலைக்கிராமங்களில் இப்பழங்கள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது.
தற்போது பீச்சஸ் சீசன் துவங்கி அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், பல பகுதியில் அறுவடையும் செய்யப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு போதுமான அளவு மழைப்பொழிவு இருந்ததால், இந்த சீசனில் பிச்சஸ் பழங்கள் நல்ல விளைச்சலை தந்துள்ளன. அதேநேரம், பழங்கள் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பீச்சஸ் பழங்கள் கிலோ ஒன்றிற்கு ரூ. 40 மட்டுமே கிடைப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஆள் கூலி, லாரி வாடகை போன்றவைக்கே இது சரியாக இருக்கிறது என்பதால், தங்களுக்கு எவ்வித லாபமும் கிடைக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளனர்.