டாக்கா:
பிரபல இஸ்லாமிய தொலைக்காட்சி சேனலான பீஸ் டிவியை தடை செய்ய உள்ளதாக வங்கதேச அரசு அறிவித்துள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவில், நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 22 பேர் பலியானார்கள்.
இந்த தாக்குதலை நிகழ்த்தியவர்களில் இருவர், இந்தியவில் இருந்து செயல்படும் பீஸ் டிவியின் போதகர் சாகிர் நாய்க்கின் நிகழ்ச்சியால் ஈர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது  ஆனால், இதை ஜாகிர் நாய்க் மறுத்துள்ளார்.
இந்த நிலையில் ஜாகிர் நாய்க்கின் பீஸ் டிவியை தடை செய்வதாக வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.
.