சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் உள்ள சர்ச்சைக்குரிய டாஸ்மாக் மதுக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஐந்து நாட்களாக நடந்து வந்த மக்கள் போராட்டம் எதிரொலியாக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

தான்சானியா நாட்டு அதிபருடன் ட்ரம்ஸ் வாசித்தார் மோடி

ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க மத்திய- மாநில அரசு இணைந்து செயல்படும்:பயங்கரவாதமும், வன்முறையும் எந்த வடிவத்தில் வந்தாலும் அதனை ஏற்க முடியாது–வெங்கைய நாயுடு

கள், சாராயம் போன்ற போதை வஸ்துக்களில் ஊறி திளைக்கும் மாநிலம் புதுச்சேரி.தற்போது அங்கு சொகுசு கப்பல்களில் சூதாட்ட சேசினோக்களை கொண்டு வரப் போகிறதாம் அம்மாநில அரசு.கேசினோக்களில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளுக்கு மட்டும்தான் அனுமதி.உள்ளூர்வாசிகள் சூதாட முடியாது.

ஐ.பி.எஸ். அதிகாரிகளின் வீடுகளில் காவலிருக்கும் போலீசார் வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றனர்.காய்கறி வாங்குவது, நாயைக் குளிப்பாட்டுவது, தோட்ட வேலை, துணி துவைப்பது என பட்டியல் நீள்கிறது.சென்னையில் மட்டும் 700க்கும் மேற்பட்ட போலீசார் வேலையாட்களாகத்தான் இருக்கின்றனர்.அவர்களை அப்பணியிலிருந்து திரும்பப் பெற்று காவலர் பணியிடங்களை நிரப்ப டி.ஜி.பி. அசோக் குமார் உத்தரவிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் நடந்த வன்முறையால் அமர்நாத் யாத்திரை சென்ற தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் 5 ஆயிரம் பேர் யாத்திரையை தொடரவோ, தமிழகம் திரும்பவோ முடியாமல் தவித்து வருகின்றனர்.

விராலிமலை அருகே சுமையுந்து கவிழ்ந்து விபத்து 5 மாத கைகுழந்தை உள்பட 30 -க்கும் மேற்பட்டோர்  பேர் காயம்

சென்னையில் காதலித்து வந்த காவலர் தன்னைக் கல்யாணம் செய்து கொள்ள மறுத்ததால் பெண் காவலர் ஒருவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

காஷ்மீரில் அன்னியர்கள் தூண்டுதலால் வன்முறை சம்பவம் அதிகரித்து வருவதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

கட்சிக்காரர்கள் ஆளுக்கு ஒரு பக்கமாக ஓடிக் கொண்டிருப்பதாலும், திமுக, அதிமுகவுடன் மோதி வெல்லக் கூடிய வாய்ப்புகள் சுத்தமாக இல்லை என்பதாலும், உள்ளாட்சித் தேர்தலை தேமுதிக புறக்கணிக்கலாம் என்று தெரிகிறது.

திருப்பதி கோவில் டிவி சேனலை தமிழிலும் ஒளிபரப்ப வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவிடம் தேவஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் வன்முறையால் திடீரென கூடிய கும்பல் ஒன்று அனந்நாக்கில் போலீஸ் வாகனத்தை ஜுலம் ஆற்றில் தள்ளியது. இதில் ஜுப்பில் இருந்த ஒரு போலீசார் உயிரிழந்தார்.

மத்திய பிரதேசத்தில் சாமியார் ஒருவரின் இறுதி சடங்கு மிகவும் பிரமாண்டமான முறையில் ரூ.7 கோடி செலவில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது

அதிமுகவில், தலைமைக்கு எதிராகச் செயல்படும் துரோகிகள் இருப்பதாகக் கூறிய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்,அவர்களைக் கண்டுபிடித்து களையெடுக்கவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை வைத்துள்ளார்

அரக்கோணம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார ரயில் எதிர்பாராத விதமாக தடம் புரண்டதால், அங்கு சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் அரக்கோணம் வழியாக சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட 8 ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் மீண்டும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இத்துடன் 22வது கிராண்ட் ஸ்லாமை கைப்பறியுள்ள செரீனா, ஜெர்மனி முன்னாள் வீராங்கனை ஸ்டெஃபியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை ஒட்டி, மீண்டும் ஸ்டாலின், நமக்கு நாமே பயணத்தை துவக்க உள்ளார்.12 மாநகராட்சிகளில் மட்டும் நமக்கு நாமே பயணம் மேற்கொள்வார் என தெரிகிறது.ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அவர் தன் பயணத்தை துவங்கலாம்.

தான்சானிய அதிபர் ஜான் பாம்பே மகுஃபுலியுடன், பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்களும் 5 உடன்பாடுகளில் கையெழுத்திட்டனர்.குடிநீர் வழங்கல், நல்வாழ்வுத்துறை மேம்பாடு ஆகியவற்றில் தான்சானியாவுக்கு உதவ இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடியின் மொசாம்பிக் பயணத்தில், மொசாம்பிக் நாட்டில் இருந்து பருப்பு இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலமாக, அதானி குழுமம்தான் லாபம் அடையப் போகிறது என பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சி தாக்கியுள்ளது.

சட்டீஸ்கரில் மிகவும் அபூர்வமான இரண்டு தலை நாகப்பாம்பு ஒன்று சிக்கியது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வதியம் பகுதியில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.