சிட்னி:
ஸ்திரேலிய பொதுத் தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி தலைமையிலான தேசிய கூட்டணியே, மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் பதிவான  வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், எந்த அணிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இழுபறி நிலை நீடித்தது.
 

ஆஸ்திரேலிய பார்லிமென்டில், மொத்தம், 150  இடங்கள் உண்டு. இதில் 76  இடங்களைப்  பெறும் கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும். ஓட்டு எண்ணிக்கையின் இறுதிச்சுற்று நிலவரப்படி, ஆளும் லிபரல் கட்சி தலைமையிலான தேசிய கூட்டணிக்கு, 74 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
தொழிலாளர் கட்சிக்கு, 66 இடங்கள் கிடைத்துள்ளன. இதனால் இழுபறி நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் சுயேச்சை எம்.பி.,க்கள், மூவரின்  ஆதரவைக் பெற்றுள்ளதால், லிபரல் — தேசிய கூட்டணி மீண்டும் ஆட்சிமையப்பது உறுதியாகியுள்ளது. ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சி  தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டது.
இதையடுத்து  மீண்டும் லிபரல் கட்சி தலைமையில், மீண்டும் ஆட்சி அமைகிறது.