ரோட்டோரத்தில் வடாபாவ் விற்பவரின் சொத்து மதிப்பு 50 கோடி

Must read

மத்திய அரசு கொண்டு வந்த தானே முன்வந்து வருமானத்தை அறிவிக்கும் திட்டம் அரசுக்கு நன்றாகவே கைகொடுத்துள்ளது. சமீபத்தில் மும்பை மற்றும் அதனருகே உள்ள பெருநகரங்களில் உள்ள ரோட்டோர உணவகங்களில் வருமான வரித்துறை நடத்திய அதிரடி சோதனைகளில் பல கோடி கருப்பு பணம் கைப்பற்றப்பட்டது நினைவிருக்கலாம்.

tax

இதையடுத்து ரோட்டோர உணவக முதலாளிகள் பலர் தங்கள் சொத்து மதிப்புகளை அறிவிக்க தொடங்கியுள்ளனர். மும்பையில் ரோட்டோரத்தில் வடாபாவ் விற்பவர் தனது சொத்து மதிப்பு ரூ.50 கோடி என அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே கட்டாத வருமான வரிக்கும் சேர்த்து ரூ.22.5 கோடியை வருமான வரியாக கட்ட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
கட்கோபரை சேர்ந்த ஒரு ஜூஸ் கடை உரிமையாளர் தனது சொத்து மதிப்பு ரூ.5 கோடி என அறிவித்துள்ளார். மேலும் பல ரோட்டோர கடை உரிமையாளர்கள் தங்கள் சொத்து மதிப்பை ரூ25  லட்சத்திலிருந்து 2 கோடிவரை இருப்பதாக அறிவித்து உள்ளனர். இதுவரை 40,000 கோடி மதிப்பிலான கணக்கு காட்டப்படாத சொத்துக்கள் இப்போது தானே முன்வந்து அறிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

More articles

Latest article