மோசமான தட்பவெப்பம்: ஜிசாட்-18 லாஞ்ச் ஒத்திவைப்பு

Must read

இஸ்ரோ சார்பாக தென் அமெரிக்காவின் பிரஞ்சு கயானாவிலிருந்து இன்று நள்ளிரவு ஏவப்படவிருந்த ஜிசாட்-18 மோசமான தட்பவெட்பம் காரணமாக ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

gsat

இந்த செயற்கைக்கோள் 3,404 கிலோ எடையுள்ளதாகையால் இதை நமது வழக்கமான பி.எஸ்.எல்.வியால் சுமந்து செல்ல இயலாது. எனவே இந்த செயற்கைக்கோளை ஏரைன்-5 என்ற உலகின் மிகப் பிரம்மாண்டமான ஐரோப்பிய ராக்கெட் சுமந்து செல்லவிருக்கிறது.
இந்த ஏரைன்-5 ராக்கெட்டானது 52 மீட்டர்  உயரமும், 777 டன் எடையும் கொண்டதாகும். இதுவரை 73 முறை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு செயற்கைகோள்களை நிறுவும் வேலையை கச்சிதமாக முடித்துள்ளது.
இந்தியாவும் ஜி.எஸ்.எல்.வி -எம்கே 3 என்ற இதேபோன்ற பிரம்மாண்டமான ராக்கெட்டை உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை அனுப்பப்படும் ஜிசாட் -18 தகவல் தொழில்நுட்பம், வங்கி தொடர்பான பணிகள், மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு பேருதவியாக இருக்கும் என்று தெரியவருகிறது.

More articles

Latest article