“பட்டாஸ்” பட புதிய ப்ரோமோ டீசர்….!

Must read

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் , துரை செந்தில் குமார் இயக்கத்தில் , தனுஷ் நடிக்கும் திரைப்படம் பட்டாஸ். இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கின்றார் .

இவர்களுடன் மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். விவேக்-மெர்வின் இசையமைக்கிறார்.

கடந்த ஜூலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருந்த படக்குழு சமீபத்தில் படத்தின் இரண்டு பாடல்களை வெளியிட்டது .

ஜனவரி 15-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்திற்கு தணிக்கை குழு “யு” சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் இடப்பெறும் ஜிகிடி கில்லாடி பாடல் ஒன்றை புதிய ப்ரோமோ வீடியோயோவாக படக்குழு வெளிட்டு “பட்டாஸ்” படத்தின் மீதான ரசிகர்களின் கவனத்தை தக்கவைத்துள்ளது.

More articles

Latest article