வார ராசிபலன்:   08.02.2019 முதல் 14.02.2019 வரை! வேதா கோபாலன்

Must read

மேஷம்

விளையாட்டுத் துறையில் உள்ளவங்களும் கலைத்துறைல உள்ளவங்களும் சூப்பர் வெற்றி குவிப்பீர்கள். நீங்க மாணவரா? ஆஹா.. இந்த வாரம் இனிய வாரம்.  உங்களுக்குப்  படிப்பில் உற்சாகம் படிப்படியாக உயர்ந்து பாராட்டும் பரிசும் வாங்கப்போறீங்க.. பார்த்துக்கிட்டே இருங்களேன். தன்னம்பிக்கை அபரிமிதமாக வளரும். யார் என்ன சொன்னாலும் டோன்ட் கேர் என்று தூக்கிப் போட்டுவிட்டு நேரான பாதையில் போயிக்கினே இருப்பீங்க. உங்களை அசைச்சுக்க ஆளில்லை.   வெளியூர் அல்லது வெளிநாட்டில் புது வீடு வாங்குவீங்க.

ரிஷபம்

உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். இன்னும் கேட்டால்.. முன்பைவிட மிகவும் மேம்பட்டு இருக்கும். சென்ற ஓரிரண்டு ஆண்டுகள் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். அலுவலகத் திலும் பள்ளி/ கல்லூரியிலும் கலவையான பலன்களை பெறுவீர்கள். உங்களது தந்தையின் ஆரோக்கியம் பற்றிய கவனம் கொண்டிருப்பதால்,  வார ஆரம்பத்தில் உடல் நலனில் சாதகமான பலன்களை பெறலாம்.. இந்த காலகட்டத்தில், தேவையே இல்லாமல் நீங்க கற்பனை செய்து வெச்சிருக்கிற சின்ன சின்ன டென்ஷன்களை கைவிட்டால் உங்களது உடல்  மட்டுமில்லீங்க.. மனசும்கூட ஆரோக்கியமாகவே இருக்கும். வேலையை பொருத்த வரை கலவையான பலன்களை பெறுவீர்கள். உங்களது வேலையில் பணியுயர்வு பெற சாத்தியம் உள்ளது. ஆனால் ஒண்ணு நினைவு வெச்சுக்குங்க. அடுத்தவன் முன்னேற்றத் தைப் பார்த்துக் காதில் பச்சைக் கலர் புகையெல்லாம் விடாதீங்க. அவரவர் உழைப்புக்கும் நல்ல மனசுக்கும் கிடைக்க வேண்டியது தானாகக் கிடைக்கும்.

மிதுனம்

நீங்க  பிசினஸ் செயபவரா? எனில் உங்களது தொழிலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லப் போறீங்க. உங்களின் அலுவலகம்/ பள்ளி/ கல்லூரிகளில் உங்க உழைப்பு மட்டு மின்றி  அதிர்ஷ்டமும் உதவும். உங்களது பிராஜெக்ட்டுகளுக்காக கடினமாக உழைப் பீங்க. இது  இப்போதைக்குப் பெரிய அளவில் பலன் குடுக்கலைன்னு புலம்பாதீங்க.. அப்செட் ஆகாதீங்க. ஏன் தெரியுமா? அது   எதிர்காலத்தில் உங்களுக்கு கை கொடுக்கும். இந்த வாரத்தைப் பொருத்த வரையில்  பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஆரம்பத்தில் பொருளாதார நிலை உறுதியாக இருக்கும் ஆனால் செலவுகளும் ஏறியபடியே இருக்கும். திடீரென்று தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.  எனினும் வாரம் முடிவதற்கள் எங்கிருந்தோ வர வேண்டிய பணமெல்லாம் வந்து நிம்மதியடைவீங்க. குடும்பத்தில் ஹாப்பி ஹாப்பி நிலைதான். கடந்த ஒன்றரை வருஷம் இருந்த பிரச்சினைகள் தீரும்.

கடகம்

முன்னெப்போதையும்விட இனி பணவரவு அதிகரிக்கும். மனசில் இருந்த விரக்தியும் டென்ஷனும் தீரும். பல காலமாய் இருந்து வந்த சருமப்பிரச்சினையும் இதர  ஆரோக்யப் பிரச்சினைகளும், யாரோ மந்திரக் கோலைச் சுழற்றிய மாதிரி தீர்ந்து பளிச்சென்று நிம்மதியை அளிக்கும். அரசில் அல்லது மற்றத் துறைகளில் உள்ள பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.  அது பிற்காலத்தில் பெரிதாக வளர்ந்து எதிர்கால நன்மைகளி அளிக்கும். உங்களுக்கும் ஒரு அந்தஸ்த்தும் கௌரவமும் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். மனைவி, கணவன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் கீழ்  வேலை பார்ப்பவர்கள் முன்பைவிட நல்ல முறையில்  வேலை செய்வாங்க. மனப்பூர்வமாய் நன்றி சொல்லுங்க. ஏனெனில்  அவங்களைவிட உங்களுக்குத்தான் நல்ல பெயர் கிடைக்கும்.

சிம்மம்

உஷ்ணாதிக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நமக்கு மிஞ்சி யாரும் இல்லைன்னு தன்னம்பிக்கையோட நினையுங்க. மனசைத் தேவையில்லாமல் அதைரியப்படுத்தும் காரணிகளைக் கிட்டே விடாமல் கெட் அவுட் சொல்லுங்க. குழந்தைகள் வாழ்க்கையில் ஓரிரு தடைகள் ஏற்பட்டாலும் கடைசியில் எல்லாமே வெற்றிகரமாக நடக்கும். வார்த்தைகளால் பிரச்சினைகள் ஏற்பட்டுக்கிட்டிருந்த நிலை மாற்றி வாக்கினால் நன்மை, லாபம், பெருமை, முன்னேற்றம், மகிழ்ச்சி  என்று நல்ல விஷயங்களை ஒரு லிஸ்ட் போடுங்களேன். அவற்றில் பல இந்த வாரம் ஏற்படும். இதெல்லாம் பிற்காலத்துக்கு உதவும். முன்பு வேலை விஷயமாக நிறைய அலைய வேண்டியிருந்தது. இனி நிரந்தரமாக ஓரிடத்தில் இருந்து வேலை செய்வீங்கப்பா. உங்க திறமைக்கு ஏற்ற பாராட்டுக்கள் குவியும். பரிசுகளும் உண்டு.

சந்திராஷ்டமம்: பிப்ரவரி 8 முதல் பிப்ரவரி 10 வரை

கன்னி

முன்பெல்லாம் எதிர்பார்த்து ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த முன்பு வேலை விஷயமாக நிறைய அலைய வேண்டியிருந்தது. இனி நிரந்தரமாக ஓரிடத்தில் இருந்து வேலை செய்வீங்கப்பா. உங்க திறமைக்கு ஏற்ற பாராட்டுக்கள் குவியும். பரிசுகளும் உண்டு. உங்கள் வீட்டில் கணவன் மனைவி சண்டை பக்கத்து வீட்டுக்காரர்கள்  தொலைக் காட்சித் தொடர் நாடகத்தை  அணைத்துவிட்டுப் பார்க்கும்படி ஆகாமல் பார்த்துக் கொள்வது உங்க பொறுப்பு.  பிரச்சினைகள் எல்லாம் சில்லறைப் பிரச்சினகைள்தாங்க! அதைப் போய்ப் பெரிசுபடுத்தச் சண்டையா போடுவாங்க. வேண்டாங்க. சிலருக்கு வீட்டில் குட்டிக் குரல் கேட்க ஆரம்பிக்கும்.  அந்த ராசி காரணமாக உங்களுக்கு எதிர்காலத்தில் நன்மைகள் ஏற்படும்.

சந்திராஷ்டமம்: பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 12 வரை

துலாம்

நிறைய உல்லாசமான பயணங்கள் போவீங்க. உங்க குழந்தைங்களுக்கு நல்லது நடக்கப்போகுதுங்க. படிக்கும் பிள்ளைகள் இருக்கும் வீட்டில் குழந்தைகள் பரிசுகள் வாங்கிப் போட்டிகளில் ஜெயித்து வருவாங்க. வளர்ந்த குழந்தைகள் இருக்கும் வீட்டில் கல்யாணக்களை அதிகரிக்கும். சகோதரன்/ சகோதரிகிட்ட சண்டை வேண்டாம். சின்னஞ்சிறு மீனை  பூதக்கண்ணாடி வழியே பார்த்து திமிங்கலம்னு நினைக்கறமாதிரி சின்னத் தலைவலி காய்ச்சலையெல்லாம் பெரிய நோய்கள்னு நினைச்சு பயந்து நடுங்காதீங்க.. ப்ளீஸ். பள்ளி கல்லூரியிலும்.. அலுவலகத்திலும், அக்கம்பக்கத்திலும் பொது இடங்களிலும் உங்க செல்வாக்கு ராக்கெட்டாய் உயரும். தந்தையின் உடல் நிலையைக் கொஞ்சம் கவனமாய்ப் பார்த்துக்குங்க.  எனிவே.. அவரால் உங்களுக்கு நன்மையும் லாபமும் உண்டுங்க.

சந்திராஷ்டமம்: பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 15 வரை

விருச்சிகம்

நீங்க முழுமனசோட செலவு செய்யச் செய்ய மகாலட்சுமி அம்மா கஜானாவை நிரப்பிடு வாங்க. வாழ்க்கை வசதிகள் குறைந்ததாய் நீங்களாகக் கற்பனை செய்து புலம்ப வேண் டாம்.  முன்பைவிட இப்போ அதிருஷ்டம் அதிகமாகியிருக்கா இல்லையா? பிறகென்ன? குடும்பத்தினருடன் சண்டை சச்சரவுகள் வேண்டாங்க. குறிப்பாய்ப் பெண்கள் பிறந்த வீட்டில் சச்சரவு செய்ய வேண்டாம். உங்கள் தயவு இப்போதைக்கு அவங்களுக்கு எந்த அளவு வேணுமோ அந்த அளவுக்கு அவர்கள் தயவும் உங்களுக்குப் பிற்பாடு கட்டாயம் தேவைப்படப் போகுதுங்க.  கடந்த ஓரிரண்டு வருடங்கள் இருந்ததற்கு மாற்றாகக் குட்டீஸ்கள் மூலமாக  நிம்மதியடைவீங்க, மகிழ்ச்சியடைவீங்க, பெருமைப்படுவீங்க.

தனுசு

வெளிநாடு வெளியூர் சம்பந்தமான செலவுகள் இருக்கும்.வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். அலுவலகத்தில் கொடுத்த பொறுப்பை நிறைவேற்றிட்டீங்க. உடனே உங்களுக்கு மாலை போட்டு மரியாதை செய்வாங்கன்னு எதிர்பார்க்காதீங்க. அதது எப்போ நடக்க வேண்டுமோ அப்போ நடக்கும்தான். செலவுகள் மகிழ்ச்சியைப் பெருக்கிக் கொடுக்கும்.  செலவு பற்றிக் கவலைப்படாமல் தைரியமாய் இருங்க. உங்களுக்கே செலவு களில்  எது அவசியம் எது அநாவசியம்னு சரியாய்த் தெரியும். சாப்பாட்டு விஷயத்தில் சற்றே ஜாக்கிரதையாய் இருந்துட்டா போதும். ஆரோக்யம் அற்புதமாய் இருக்கும். மம்மியை பத்திரமாப் பார்த்துக்குங்க. இனி எல்லாம் சுபமே. குழந்தைகளுக்காக நிறையக் கவலைப் பட்டீங்க…வேதனைப் பட்டீங்க. எல்லாமும் சரியாகிவிடும் இந்த வாரத்தின் கடைசில.

மகரம்

ஆரோக்யத்தைக் கெடுக்கும் தீய பழக்கங்களுக்கு உங்களை நண்பர்கள் வற்புறுத்தினால் அவங்களுக்குத் தாற்காலிகமாவே நிரந்தரமாவோ குட்பை சொல்லிடுங்க. தொழில் உத்தியோகம் வியாபாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். தொழிலில் எதிரிகள் தோன்றுவது போல் பயமும் பிரமையும் ஏற்பட்டாலும் சீக்கிரத்தில் மன அமைதி ஏற்படும். நிலம் வீடு வாகன வகைகளில் ஏற்கனவே இருந்து  வந்த பிரச்சினைகள்              தீர்ந்து அப்பாடா என்ற நிம்மதி கிடைக்கும். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். மிக அதிக அளவில் பணவரவு இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பிசினஸ் செய்பவர்களுக்குத் தொழிலில் மேன்மை நிலை உருவாகும் புதிதாக தொழில் ஒன்றை துவங்கி வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள். பணவரவு அபரிமிதமாக இருக்கும். பணத்தால் எல்லாவற்றையும் சாதிப்பீர்கள். வாழ்க்கை துணையுடன் கருத்து இருந்து வந்த கருத்துவேறுபாடு சரியாகும்.

கும்பம்

வியாபாரிகளுக்குத் தொழிலில் மேன்மை நிலை உருவாகும் புதிதாக தொழில் ஒன்றை துவங்கி வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கான தைரியமும் தன்னம்பிக்கையும்  மட்டு மின்றிப் பணவரவும் அபரிமிதமாக இருக்கும். பணத்தால் எல்லாவற்றையும் சாதிப்பீர்கள். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலைமை மாறி இப்போதுதான் ஒரு புரிதல்  மெதுவாக மலரும். அடிச்சுது லக்கி பிரைஸ். நீங்க மட்டும் இல்லை…உங்க எதிரி, நண்பர், மம்மி, டாடி, புரொஃபசர், பிரின்சிபால் யாரும் நினைச்சுப் பார்த்திருக்க மாட்டார் நீங்க இந்த அளவு சக்கை போடு போடுவீங்கன்னு. பாராட்டு என்பது பல நாட்கள் கழித்து உங்களை எட்டிப்பார்த்து சந்தோஷத்தில் திக்குமுக்காடச் செய்யும்.

மீனம்

நிறைய ஜாலி டூர் போவீங்க. புதிய வீட்டுக்கு அஸ்திவாரம் போடுவீங்க. பணத்துக்காகக் கொஞ்சம் அல்லாட வேண்டியிருக்கும். கவலை வேண்டாம். வெற்றிகரமான அலைச்சல் தான். கடன் உடன் வாங்க வேண்டியிருந்தால் சற்று யோசித்துச் செய்யுங்கள். எனினும் செய்யுங்கள். பெரியவர்களின் ஆலோசனையைப் புறக்கணிக்காதீங்க.  அட்லீஸ்ட் அவங்க மேல நீங்க வெச்சிருக்கற மரியாதையை அவங்க புரிஞ்சுக்கற மாதிரி நடந்துக்குங்க. பாசம், மரியாதை எல்லாவற்றையும் உள்ளே மறைச்சு வெச்சு யாருக்குங்க லாபம்? வெளிப்படுத்த ணும். மம்மிக்கு உடம்பு சரியில்லாமல் போனால் கலவரத்திலும் பதற்றத்திலும் தலையில் கைவெச்சு உட்கார வேண்டாம். இது தற்காலிக பிரச்சினைதான். அவங்க முன் எப்போதும் போல நடமாடி உங்களுக்கு பிரியாணி/ வெஜ் புலாவ் செய்து தருவாங்க.

More articles

Latest article