வார ராசிபலன்: 01.02.2019 முதல்  07.02.2019 வரை  கணித்தவர்: வேதா கோபாலன்

Must read

மேஷம்

பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். அதாவது படிப்பில் முன் நிலையில் இருப்பாங்க.. அல்லது அலுவலகத்தில் நல்ல பெயர் அவார்ட் ரிவார்ட் எடுத்து உங்களைப் பெருமைப்படுத்துவாங்க.. தகுந்த வயதில் உள்ள வங்களுக்குக் கல்யாணம் நிச்சயமாக வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லதுங்க.  தேவையில்லாத வார்த்தை கைளை விட வேண்டாங்க. அவங்க பக்கம் நியாயம் இருந்தால் புன்னகை யுடன் அதை ஒப்புக்கிட்டு வாழ்த்துங்களேன். என்ன ஆகிவிடப்போகிறது? உங்கள் வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. அது மட்டும் இல்லைங்க. தேவையே இல்லாமல் அவங்க வேலையை நீங்க இழுத்துப்போட்டுக்கிட்டு செய்யவும் வேண்டாமே?

ரிஷபம்

வியாபாரத்தில் வங்கிக் கடன் கிடைத்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீங்க.. பிசினஸ் செய்யாதவங்ககூட வீடு வாங்கவும், மனை வாங்கவும், வாகனம் பர்ச்சேஸ் செய்யவும் கடன் வாங்க நேர்ந்தால் அதிகக் கேள்விகள் கேட்காமல் உங்களை நம்பிப் பணம் கொடுப்பாங்க. நீங்களும் நம்பிக்கைக்கு உகந்தவ ராகத் தான் நடந்துக்குவீங்க என்பது நற்செய்தி.  சக வியாபாரிகளிடம் இணக்கமாக நடந்துகொள்ளவணுங்க. குறிப்பா பார்ட்னர்ஷிப் தொழில் செய்யறீங்கன்னா பொறுமையும் நிதானமும் கட்டாயம் வேணுங்க. கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாட்டுக்குப் போயி நிகழ்ச்சிகள் கொடுக்கவும் சான்ஸ் உண்டு.

சந்திராஷ்டமம் : ஜனவரி 31 முதல் பிப்ரவரி 3 வரை

மிதுனம்

நீங்கள் எந்தத் துறையைச் சார்ந்தவர் என்றாலும் உங்கள் துறையில் முன்னோடிகளாக உள்ளவர்களின் அறிவுரைகள் உங்கள் வளர்ச்சிக்குப் பயன்படுவதாக இருக்கும். மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் குறையக் கூடும். மனதில் பல்வேறு எண்ணங்கள் தோன்றி சஞ்சலத்தை ஏற்படுத்தக் கூடும். ஆசிரியர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். பெண்கள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.  அலுவலகத்தில் இந்தப் பக்கம், அந்தப் பக்கம் திரும்பாதீங்க. நீங்க உண்டு உங்க கணிணி உண்டு என்று நீங்க பாட்டுக்கு கடமையை மட்டும் செய்ங்க. பிறகு பாருங்க…

சந்திராஷ்டமம் : பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 5 வரை

கடகம்

திடீரென்று ஒரு கவனம் ஏற்பட்டு மாணவர்கள் படிப்பில் ஈடுபாட்டுடன் இருப்பீங்க. இதனால் எல்லோரும் உங்களைப் பார்த்து “சபாஷ்” என்பார்கள். குறிப்பிட்டுச் சொல்லப்போனால் ஆசிரியரின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தரும். புதிய செய்திகள் வரப்போவதால் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். உங்கள் சின்னச் செய்கைகள்கூடப் பாராட்டைப் பெற்றுத் தரும்போது உற்சாகத்துக்குக் கேட்பானேன். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கக்கூடும்.எனினும் நீங்க இதைவிடப் பெரிய நன்மைகளை எதிர்பார்த்திருக்கீங்க. வெயிட் மா வெயிட். வரும்… வரும்.

சந்திராஷ்டமம் : பிப்ரவரி 5 முதல் பிப்ரவரி 8 வரை

 சிம்மம்

எத்தனையோ நாளாக.,.. வாரமாக… மாதமாக,. வருடங்களாகக் காத்திருந்த நற்செய்தி…  அதாவது மகன் அல்லது மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும். அலுவலகத்தில் இதுவரை எதிர்பார்த்த சலுகைகள் கிடைக் குங்க. இது வரை கேட்டும் கிடைக்காததெல்லாம் இப்போ கேட்காமலேயே கிடைக்கும். இதுநாள் வரை வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். சுமார் வேலையில் இருந்தவங்க சூப்பர் வேலைக்குப் போக ஆரம்பிப்பீங்க.. பிசினஸ் செய்பவர் என்றால்… வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும். போட்ட முதல் பல மடங்கு குட்டி போடும். பார்ட்னர்களால் ஏற்பட்டுக்கொண்டிருந்த ஒற்றைத்தலைவலி சரியாய்ப் போகும்.

கன்னி

பொருளாதார நிலை ஓரளவு திருப்தி தருவதாக இருக்கும். என்ன? ஓரளவு தானா என்று கேட்கறீங்களா? முன்பெல்லாம் மோசமாய் இருந்ததே ..அதோடு கம்பேர் செய்தால் இது சூப்பருங்க. முக்கிய முடிவுகள் எடுப்பதில் குழப்பம் ஏற்பட மனசை அனுமதிக்காதீங்க. தேவையில்லாத பயங்கள்தான் காரணம். நல்லவங்களைக் கேட்டு முடிவெடுங்க. நன்மையா முடியும். அல்லது ஜாத கத்தை எடுத்துக்கிட்டுப்போய் உங்களின் குடும்ப ஜோசியர்கிட்ட காண்பிச்சு தசா புக்தி காலத்தைக் கணக்கிட்டு அதன்படி தீர்மானங்கள் எடுத்தா பிரச்சினையே வராது. தேவையற்ற சில பிரச்னைகளால் மனதில் அடிக்கடி சஞ்சலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

துலாம்

ஒரு சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். உடனே முகம்  வெளுத்துத் தலையில் கை வெச்சுக்கிட்டு மூஞ்சியைத் தூக்கிக்காதீங்க. சரியான சிகிச்சை மூலமா உடனே குணம் தெர்யும். தந்தைவழியில் அனு கூலம் உண்டாகும். அப்பாவுக்கும் உங்களுக்கும் இடையே இருந்து வந்த நான்காம் உலகப்போர் நிறுத்தத்துக்கு வரும். தந்தையின் தந்தை சேர்த்து வைச்ச சொத்துக்கள் உங்க கைக்கு வரும். ஏதாவது கேஸ்கள் நிலுவையில் இருந்தால் ஒரு வழியாய் முடிவுக்கு வரும். அதுவும் உங்களுக்குச் சாதக மாகவே முடியும். டோன்ட் ஒர்ரி. வெளியூர்  வெளிநாடு பயணங்கள் திட்டமிட்டபடி வெற்றிகரமாக முடியும். எத்தனைக்கெத்தனை பயந்தீங்களோ அத்தனைக்கத்தனை சாதகமாக முடியும்.  பயம் வேண்டாம்.

விருச்சிகம்

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பொறுப்பு அதிகமாவதற்குக் காரணமே அனேகமாய்ப் பதவி உயர்வாகவே இருக்கும். அதிகாரி களிடமும், சக பணியாளர்களிடமும் உங்களின் மதிப்பும் மரியாதையும் கூடும். மாணவர்களுக்குப் பாடங்களில் ஈடுபாடு குறையக்கூடும். எனவே சற்று அதிக கவனம் செலுத்துங்க. மனசு அலைபாயாம … மனதை ஒருநிலைப்படுத்தி பாடங்களில் கவனம் செலுத்து வது நல்லது. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி யான வாரம். எல்லோரிமும் எல்லோரிடமும் அன்பாய் இருப்பதால் மகிழ்ச்சிக்கு என்ன குறை..

தனுசு

உறவினர்கள் வருகை உற்சாகம் தரும். அதிலும் பெண்களுக்குப்  பிறந்த வீட்டினர் வந்து எதிர்பாராத நன்மைகளைச் செய்துவிட்டுப் போவார்கள்.  வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் மட்டுமின்றி எதிர்பாராதவையும் கிடைக்கும். அதிர்ஷ்டம்  பற்றி அதிக நம்பிக்கை வேணாங்க. கடமையைச் செய்துகிட்டே போங்க. இப்போதைக்குக் கணவன் மனைவிக்குள் மிக நல்ல புரிதல் இருக்கும். தொடர வைப்பது உங்க கையில் தான் இருக்கு. பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

மகரம்

உங்களுக்கு அல்லது சகோதர சகோதரிக்குத் திருமண முயற்சிகள் அனுகூல மாக முடியும். அது பற்றிக் குடும்பத்தில் நிலவி வந்த சோகம் தீரும். பயணத் தின் போதும் வீட்டிலும் எச்சரிக்கையாக இருந்துக்குங்க. புதிய மனிதர்களிடம் எந்தப் பேச்சும் வைச்சுக்க வேண்டாம். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பெரிய அதிகாரிகள் உங்களைக் கவனித்துப் பாராட்டுவாங்க. அது உங்க எதிர்கால வளர்ச்சிக்கு ரொம்பவே உதவிகரமா இருக்கப்போகுதுங்க. பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதுடன் சக பணியாளர்களும் பணிகளில் ஒத்துழைப்பு தருவாங்க.  உங்களுக்குக் கீழே  ஒர்க் பண்றவங்களும் பணிந்து நடப்பதால் இயல்பாகவே நிம்மதியான அலுவலக சூழல் நிலவும். குட் லக.  

கும்பம்

சில அநாவசியமான செலவுகளும் ஏற்பட வாய்பிருக்கங்க. கூடுமானவரை vயில் அதை அவாய்ட் செய்யப்பாருங்களேன்.  குடும்பத்தில் உள்ளவங்களை அனுசரித்துப் போக வேண்டியது  அவசியம்தாங்க. தப்பு அவங்க பேர்ல இருந்தாலும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. அவங்க சீக்கிரத்தில் உணர்ந்து பெரிய அளவில் ஸாரி சொல்லுவாங்க. இவ்ளோ காலமா திருமணம் தடைப்பட்டு வந்தவங்களுக்குத் திருமணம் கூடி வரும். அலுவலகத் தில் உங்கள் பொறுப்புகளை சிறப்பாகச் செய்து மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீங்க. திடீர்னு லாபங்களும் வருமானம் அதிகரிக்கும்.  சந்தோ ஷம் எதிர்பாராத திசைகளிலிருந்து வந்து குதிக்கும். குழந்தைகள் பற்றி குட் நியூஸ்  உண்டுங்க.

மீனம்

வழக்குகளில் இவ்ளோ காலமாய் இருந்து வந்த பிற்போக்கான நிலைமை யெல்லாம் மாறி, ஒரு வழியா ஏகப்பட்ட வருஷங்களுக்குப் பிறகு இப்போ சாதகமான தீர்ப்பு கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் கொஞ்சம் அதிக எச்சரிக்கை தேவைங்க. முக்கிய வேலை ஏதும் இருந்தால் அதையெல்லாம் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லதுங்க. எதற்காக மற்றவர்களை நம்ப வேண்டும்?  யோசிச்சுக்குங்க.  கலைத்துறையினருக்கு எதிர்பார்த்ததை விடவும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் போகுதுங்க. அதனால் லாபம் மட்டுமில்லைங்க.. அதிகப் புகழும் வரப்போகுது. நிறையப் பயணம் போவீங்க. குறிப்பா வெளிநாடுங்களுக்குப் போவீங்க.

More articles

Latest article