வார ராசிபலன்: 22.03.2019 முதல் 28.03.2019 வரை! வேதா கோபாலன்

Must read

மேஷம்  

பிரச்சினைகள் தீர்ந்துவிட்டது என்பதற்காகத்  தலையில் கனம் ஏற்றாமல் இருக்கும் உங்கள் அடக்கத்தை மனமாரப் பாராட்டுகிறேன்.கொஞ்ச காலத்திற்கு உற்றவர்களை /பெற்றவர் களை விட்டுப்பிரிய நேர்ந்தாலும் அதன் பலன் இனிக்கும். ஏற்கனவே அங்க இங்க எங்கேயும் நண்பர்கள். இதுல புதுசா வேற ஒரு நட்பு வட்டம் உருவாகப் போகுது.  அப்பாவாலும் அப்பா வுக்கும் நன்மைகள் நடக்கப்போகுதுங்க. மிக திடீர் அதிருஷ்டத்துக்குத் தயாரா? என்ஜாய். சகோதர சகோதரிகளின் உயர்வு காரணமாய் உங்களுக்கும் நன்மைகள் நடக்கப்போகுது என்பதால்.. பொறாமை கிறாமைப் படாதிருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.  

சந்திராஷ்டமம்: மார்ச் 25 முதல் மார்ச் 27 வரை

ரிஷபம்

மாணவர்களுக்கு திடீர்னு படிப்பு கொஞ்சம் கடினமானதுபோல் தோன்றினால் டென்ஷன் வேண்டாம். அதெல்லாம் வெரி மச் தற்காலிகமானவை என்று புரிஞ்சுக்குங்க. எதற்கும் அதிகமாய் உணர்ச்சி வசப்படாதீங்க. அமைதியா எதையும் டீல் செய்ங்க. உங்களுக்கென்று ஒரு அழகான கவர்ச்சி அம்சம் இருப்பதால் எல்லோரையும் எப்பவும்போலக் கவர்ந்துக் கிட்டேதான் இருப்பீங்க. உங்க செல்வாக்கை எந்த சக்தியாலும் குறைக்க முடியாது. எனினும் நீங்களா கற்பனை செய்துகிட்டு, உங்களைப் பற்றித் தாழ்வா நினைச்சால் யாராலும் எதுவும் செய்ய முடியாது. நீங்க உசத்தி என்று உங்களுக்கே உணர்த்தும் சம்பவம் ஒன்று நடக்கப்போகிறதே. ரெடியா இருங்க. மனசுக்குப் பிடிச்ச உறவினர் வருகையால் வீடே கலகலப்பாக இருக்கும்.

சந்திராஷ்டமம்: மார்ச் 27 முதல் மார்ச் 29 வரை

மிதுனம்

உங்க உதாரெல்லாம் வீட்டில்தான். வெளியில் ஜால்ரா திலகம். எல்லோரிடமும் நல்ல பெயர். இதுல வேடிக்கைப் பேச்சு வேற. பார்ட்டிகளில் கலக்குவீங்க. எதிர்பாலினத்தால் நன்மைகள் உதவிகள் இருக்கும். யூ டிஸர்வ் இட்!  சுருங்கச் சொன்னால் அதற்குத் தகுதியானவர் நீங்க. ஏன்னு கேட்கறீங்களா? மனசு நல்லா இருக்குங்க. வேற என்ன வேணும். இப்படியே இருங்க. மனசு மாறாமல். சில சமயங்களில் சின்ன விரக்திகள் வரலாம். அதையெல்லாம் அனுமதிக் காதீங்க. இப்போதைக்கு சில வாரங்களுக்குத் தாற்காலிகமான நல்ல நேரம் வந்திருக்கு. அதை முழுவதுமாய்ப் பயன்படுத்திக்குங்க. சுப காரியங்கள் கைகூடும். சந்தோஷமான சூழல் ஏற்படும். படிப்பில் அசத்தி நல்ல பெயர் எடுப்பீங்க. ஆசிரியர்கள் கிட்ட நல்ல பெயர் எடுப்பீங்க.

கடகம்

கடந்த கால சிரமங்கள் மற்றும் டென்ஷன்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு அப்பாடான்னு மூச்சு விடுவீங்க.  இருந்தாலும் மழைவிட்டும் தூவானம் விடலைன்னு சின்னச்சின்ன எறும்புக்கடிகள் இருக்கும். ஒண்ணு செய்வீங்களா? உடை மற்றும் உபயோகப் பொருட்களில் பச்சை நிறம் உபயோகியுங்க. புதன் கிழமைகளில் மாணவர்களுக்குக் கல்வி சம்பந்தமான உதவிகள் செய்யுங்க. பச்சைப் பயிறு அடிப்படையிலான உணவுப் பொருளை ஏழைகளுக்கு உண்ணக் கொடுங்கள்.  அப்புறம் பாருங்களேன் நடக்கவிருக்கும் நன்மைகளை! குறிப்பாய் தேக ஆரோக்யம் மேம்பட்டு நிம்மதியளிக்கும். பேச்சினால் சின்னச் சின்ன இடர்களில் சிக்கவும் சான்ஸ் இருக்கு என்பதால் அபிப்ராயங்கள் எதையும் கேட்காமல் சொல்லாதீங்க. அட்வைஸ்களைக் கேட்டாலும் சொல்லாதீங்க.

சிம்மம்

இது ஒரு மிக பிசியான வாரம். ஒரு பக்கம் பயணம். ஒரு பக்கம் அலுவலக/ பள்ளி/ கல்லூரி நிர்பந்தங்கள். ஒரு பக்கம் உறவினர் சுற்றம் மட்டும் நட்பின் அன்பு மற்றும் அன்பில்லாத தொல்லைகள். என்னதான் செய்யப்போறீங்க பார்ப்போம். விருந்து சாப்பாடு அளவோட இருக்கட்டும். வெளிநாட்டிலிருந்த சந்தோஷ செய்தி வரப்போகுது. ரிங் டோன் குரலை உயர்த்தி வையுங்க.          இ-மெயில் பெட்டியைத்  திறந்தே வெச்சிருங்க.  எந்த நிமிஷம் எந்த நல்ல செய்தி வரும்னு யாருக்குங்க தெரியும்? எலக்ஷன் விஷயங்களில் கட்டாயம் பிசியா ஆவீங்க. உங்களுக்கு இந்த முறை நிறைய நன்மைகள் நடக்கப் போகுதுங்க. ரெடியா? பிளம்ஸ் மூட்டையை அவிழ்த்து விட்டமாதிரி வார்த்தைகளைத்தான் கொட்டறீங்க. அதனால் பரவாயில்லை.  எல்லாம் பாசிட்டிவ்வா இருக்கும்படி பார்த்துக்குங்க போதும்.

கன்னி

வர வரத் தெனாலி மாதிரி பயமயமா ஏன் ஆயிட்டீங்க? எல்லாம் நல்லாத்தான் நடக்கப் போகுது. ஏன் வீண் கற்பனையில் நம்பிக்கை இழக்கறீங்க? இறைவன் மேல பாரத்தைப் போட்டுக் கடமையைச் செய்துகிட்டே வாங்க போதும். குறிப்பாய் மாணவரா நீங்க?  உங்களுக்கு எப்படிக் கோபப்படறதுன்னும் தெரியலை. அப்பா அம்மாவும் போனால் போகுதுன்னு விடறாங்க. வீட்டில் செல்லுபடியாகலாம். ஆனால்  வெளியில் செல்லாது. ஜாக்கிரதையா இருந்துக்குங்க .. ப்ளீஸ…  மம்மிக்கு அவங்க மம்மி வீட்டிலயிருந்து ஜாக்பாட் அடிக்கப்போகுது. தங்கம் போன்ற பொருட்கள் வாங்கப்போறாங்க.

துலாம்

ஏகப்பட்ட செலவுகள் வரும். அதனால் பரவாயில்லை. எல்லாமே தவிக்க முடியாத  செலவு கள்தான். எல்லாச் செலவுகளுமே நன்மைதான் தரப்போகுது. அனைத்துமே முதலீடுகள் போன்றவைதான். மேலதிகாரிகளால் சின்னச்சின்ன எறும்புக்கடி போன்ற தொல்லைகளை அனுபவிக்கறீங்களா? உடை மற்றும் உபயோகப் பொருட்களில் வெண்மையை உபயோகி யுங்க. திங்கள் கிழமைகளில் யாருக்காவது வெள்ளை நிறப் பொருட்களையோ பால்  அல்லது பால் பொருட்களையோ அன்பளிப்பாகவோ அல்லது தானமாகவோ கொடுங்கள். வயதானவர்களிடம் பரிவும் அன்பும் காட்டி ஆசி பெறுங்கள்.  முடிந்தால் தாயாரை நமஸ்கரிப்பது நல்லது. அம்மாவுக்கு இத்தனை காலம் இருந்து வந்த அத்தனை பிரச்சினை களுமே மாயக் கோல் காட்டியமாதிரி சட்டென்று விலகும்.

விருச்சிகம்

திரையரங்கம் அது இதுன்னு ஜாலியாய்ப் பொழுது போகும். காதல் என்னும் வலையில் மாட்டாத திமிங்கலமாய் இத்தனை காலம் இருந்தீங்க. இனி…அதையும் பார்ப்போமே!  எல்லாம் சரிங்க. ஆனால் வாழ்க்கையைக் கொஞ்சம் சீரியசான விஷயமாய் எடுத்துக்குங் கப்பா. எதற்கும் முக்கியத்துவம் கொடுங்க. ஒரு பெரிய சந்தோஷம் என்ன தெரியுமா? நிறையப் பேசுவீங்க. ஆனால் பேச்சில் ஒரு பெரிய கனமும் கம்பிரமும் இருக்கும். அது உங்களை மிகவும் உயர்த்தும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் கட்டாயம் நடக்கும். காத்திருப்பு எதுவும் வீண் போகாது. எனினும் எந்த நல்ல விஷயமும் நீங்க எதில்பார்த்த வேகத்தில் நடக்கலை என்று சின்ன உறுத்தல் அல்லது எரிச்சல் ஏற்படக்கூடும். அப்படி நிகழாமல் பார்த்துக்குங்க.

தனுசு

குழந்தைங்க மேடை ஏறிப் பாராட்டும் பரிசும் வாங்குவாங்க. நீங்க உள்ளங்கை ரேவை அழியும்படி கைத்தட்டுவீங்க. நியாயம்தானே. எத்தனை காலத்துக் கனவு இதெல்லாம். அவங்க மேலே இனியாச்சும் நம்பிக்கை ஏற்பட்டதா? மகிழ்ச்சிங்க. கணவருக்கு/ மனைவிக்கு எதிர்பாராத சந்தோஷமும் நன்மைகளும் ஏற்படுமுங்க. குடும்ப நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தந்தைக்கு உங்களாலும் உங்களுக்குத் தந்தையாலும் நன்மைகள் ஏற்படும். திடீர் அதிருஷ்டம் ஒன்றிற்குத் தயார் செய்து கொள்ளுங்க. எதிர்பாராத நன்மையை எதிர்பார்க்கலாம். வெளிநாட்டு முயற்சிகளில் சிறு தடைகள் அல்லது தாமதங்கள் இருந்தால் கவலை வேண்டாம். இதோ நல்லபடியாக முடியும். உறுதியாக நம்பலாம் நீங்க. குடும்பத்தில் யாருக்காவது திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. குறிப்பாகப் பெண்கள் சம்பந்தமான நிகழ்ச்சியாக இருக்கும். குடும்பம் களை கட்டும்.

மகரம்

பெண்களே.. பெண்களே.. கணவர் கிட்ட உங்க வாய்ச்சொல் வீரத்தைக் காட்டாதீங்கம்மா. பாவம் . விட்ருங்க. பிழைச்சுப்போகட்டும். ஆனால் ஒன்று.. இத்தனை காலம் மனசை அரிச்சுக்கிட்டிருந்த பிரச்சினை ஒன்று அழகாக முடிவுக்கு வந்து நிம்மதி அளிக்கும். கரெக்டா? மகன்/ மகளின் திருமணம் நிச்சயமாகும். எனினும் உடனே திருமண வைபவம் நடக்கவில்லை என்றெல்லாம் கவலைப்படாதீங்க. உரிய நேரம் வரும்போது மிகச் சிறந்த முறையில் நடந்தேறும். எனவே .. காத்திருப்பது.. நல்லதுங்க. வெளிநாட்டு முயற்சிகள் எல்லாம் வெற்றிகரமாக இருக்கும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கனவே வெளிநாட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு சம்பள உயர்வு உத்யோக உயர்வு ஆகியவை சுலபமாகக் கிடைக்கும்

கும்பம்

திடீர் அதிருஷ்டம் மட்டுமின்றி என்றைக்கோ முதலீடு செய்து மறந்து   போயிருந்த தொகை யெல்லாம் பல மடங்கு பெருகி வந்து கொட்டும். சட் சட்டென்று திரை  போட்டுத் திரை விலக்கிக் காட்சிகள் மாறும் நாடகம் போல் அதிருஷ்டம் எதிர்பாராத நேரங்களிலெல்லாம் கதவைக்கூடத் தட்டாமல் ஓடி வந்து அணைத்துக் கொள்ளும். மச்சம்தான் போங்க. கவர்ச்சி அம்சம் மேம்படும். காதல் வளரும். எனினும் அந்தக் காதலுக்குத் தடைகளும் வரும். உங்கள் தீர்மானங்கள் சரியானவைதானா என்று அவ்வப்போது சரிபார்த்துக்கொள்வது நல்லதுங்க.  ஜாக்கிரதை. ஒன்றல்ல இரண்டல்ல மூன்று வித வருமானங்கள் அல்லது லாபம்  கிடைக்கும்.   இப்போதே சேமித்து வைச்சுக்குங்க. எதிர்பார்த்திருந்த லாபம் ஒன்று தாமதமாகக்கூடும். மனசைத் தயார் நிலையில் வைச்சுக்குங்க.

மீனம்

குடும்பத்தில் யாருக்கேனும் அரசியல் செல்வாக்கு ஏற்படும்.  அல்லது அரசாங்கத்தின்மூலம் உதவி கிடைக்கும்.கோபத்திற்கு வழியே கொடுக்காதீர்கள். எந்தச் சூழலிலும்…யார் உங்களுக்கு டென்ஷன் ஊட்ட முயற்சித்தாலும் கம்மென்றிருங்கள். பொறுமைக்குப் பரிசு அடுத்த பஸ்ஸில் வந்து கொண்டே இருக்கும். இன்னொரு விஷயம் சொல்லணுங்க.. ஏற்கனவே ஏதாவது கோர்ட்.. கேஸ்.. வழக்குகள் இருந்தால் அது நல்லபடியாக முடியும். ஆனால் புதிதாக ஏதாவது வழக்குப்போடுவதாக எண்ணம் இருந்தால் தயவு செய்து அந்த ஐடியாவைத் தலையைச் சுற்றித் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போடுங்க. பல காலம் கழித்து ஒரு நீண்ட பயணம் போவீங்க. அது சந்தோஷமாகவும் வெற்றிகரமாகவும் அமையும்ங்க. மகனுக்கு/ மகளுக்கு நன்மைகள் விளையும்.

சந்திராஷ்டமம்: மார்ச் 22 முதல் மார்ச் 25 வரை

More articles

Latest article