மேஷம்

தொழில் பிசினஸில்சிறிதளவு லாபம் வரும். அலுவலகத்தில் உற்சாகமாக இருப்பீங்க. கலைஞர்களின் திறமை பளிச்சிடும். லேடீஸுக்கு வீட்டிலும் அலுவலகத்திலும் மதிப்பு மரியாதை கூடும். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். பேசும் போது கேர்ஃபுல்லா  பேசவும். உங்க பேச்சினை சிலர் தவறாக புரிந்து கொள்ளக்கூடும்.  ஸ்டூடன்ட்ஸ் தேர்வுக்காக நல்லாப் படிப்பீங்க. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள் வந்தாலும் உடடினாய்த் தீரும். உற்சாகமாயிருப்பீங்க. வருமானத்தை உயர்த்தப் புது முயற்சிகளை மேற்கொள்வீங்க. வெளி நாட்டிலிருந்து குட் நியூஸ் வரும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரிடம் அனுசரித்துச் சென்று நட்பைப்பெறுவீங்க. பிசினஸில்வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்வீங்க.  ஹெல்த் நல்லா இருக்கும். ஆடம்பரச்செலவு செய்வீங்க. ப்ளீஸ் அவாய்ட் இட்.

சந்திராஷ்டமம் : ஜுன் 22 முதல் முதல் ஜுன் 24 வரை

ரிஷபம்

வியாபாரம் செய்வோருக்கு ஓரளபுவ பணவரவு கிடைக்கும். பணியாளர்களின் சேவை பாராட்டப்படும். உதவிகள் செய்து பெரியோரிடம் ஆசி பெறுவீங்க. ஸ்டூடன்ட்ஸ் சோம்பலைத் தவிர்த்து உழைத்து வெற்றி பெறுவீங்க. எலக்ட்ரானிக் பொருட்கள் சார்ந்த வியாபாரம் செய்பவர்கள் லாபம் அடைவீங்க. சேமிப்பு உயரும். புதிய நிறுவனங்களில் வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஸ் உண்டு.சிலருக்கு பதவி பொறுப்பு கிடைக்கும். இதுநாள் வரை ஏற்பட்டிருந்த நெருக்கடிகள் தீரும். திடீர் பணவரவு வரும். வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி இடையே சண்டைகள் வரலாம் கேர்ஃபுல்லா  பேசுங்கள். விட்டுக்கொடுத்து போங்க. பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இந்த வாரம் சுப காரிய பேச்சுவார்த்தை எதுவும் வேண்டாம். திருமணத்திற்கு வரன் பார்க்கும் வேலையை ஒத்திப்போடுங்க. ஜஸ்ட் ஃபார் ஸம்டைம்.

மிதுனம்

வார மத்தியில் மட்டும் சுப காரிய பேச்சுவார்தைகளை தவிர்த்து விடுங்கள். எல்லா விவகாரங்களிலும் கேர்ஃபுல்லா  இருக்கணுங்க. ஸ்டூடன்ட்ஸ் கவனத்தை சிதற விட வேண்டாம். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்பினால் பிரச்னைக்குள்ளாக  வாய்ப்புள்ளது. மனதில் இனம் புரியாத பயம் வந்துப் போகும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீங்க. பிசினஸில்எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். குதூகலம் அடைவீங்க.  வேற்று மனிதர்களிடம் கவனம் தேவை. தொழில் முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். தம்பதியர் சேவைகள்  செய்து நன்மதிப்பு பெறுவீங்க. கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் இருக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். குடும்பத்தில் பாராட்டுக்கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். கான்டாக்ட்ஸ்!

கடகம்

பிசினஸில்எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். கலைஞர்களுக்குச் சிறிய சாதனை காரணமாகத் தன்னம்பிக்கை பிறக்கும். உங்க போக்கில் நல்லவித மாற்றம் செய்துகொள்வீங்க. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீங்க. அலுவலகத்தில் உங்களை நம்பிபெரிய பொறுப்புகளை ஒப்படைப்பாங்க. பிசினஸில்வேலையாட்கள் நன்றியுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மதிப்பு கூடும். அதிரடி மாற்றம் உண்டாகும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். பெண்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பலகாலம் கழித்து இன்று பணம் வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீங்க. மனைவிக்காக ஆடை ஆபரம் வாங்குவீங்க. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத விருதுகள் கிடைக்கும். சற்றும் எதிர்பாராதவர்களிடமிருந்து பாராட்டுகள் உண்டு.சமீபத்தில் இருந்து வந்த காரிய தடையும் வீண் அலைச்சலும் தீரும்.  டெம்ப்ரரிலி.

சிம்மம்

கனவுகள் நனவாகும். அலுவலகத்தில் திடீர் கோபம் ஏற்படும். எதிர்பாலினத்தாரிடம் கேர்ஃபுல்லா  பழகுங்கள். மதிப்பு வாய்ந்த பெரியோர்களைச் சந்திப்பீங்க. மாணவர்களின் கவனம் கூடும். பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். அலுவலகத்தில் விட்டு கொடுப்பதன் மூலம் சில வேலைகளை முடிப்பீங்க. விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கலைஞர்களுக்கு வேற்றுமதத்தவர் உதவுவர். வியாபாரிகளுக்குப் பொறுமை தேவை. பிசினஸில்புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கும். பெண்களின் அருமை வெளிப்படுவதால் பாராட்டுக்கிடைக்கும். அலைச்சல் அதிகரிக்கும். மனதில்  உற்சாகம் அதிகமாவதால் திறமை கூடும். வியாபாரிகளுக்கு ஆர்டர் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். கடன் பாக்கிகள்  வசூலாவது மனதிருப்தியை தரும். ஸாடிஸ்பேக்ஷன்.

கன்னி

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிசுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள். சம்பள பாக்கி வந்து சேரலாம்.தாழ்வுமனப்பான்மை தலைதூக்க அனுமதிக்கவே செய்யாதீர்கள். பிசினஸில்வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுவீங்க. உத்தியோ கத்தில் மறைமுகத் தொந்தரவுகள் வந்து நீங்கும். சகிப்புத் தன்மையைக் கைகொள்ள வேண்டும். அநாவசியக் கோபம் உண்டாகலாம். கொடுத்த கடனை திரும்ப பெறுவதில்  சிரமம் ஏற்படுவதால் எரிச்சலடைய வேண்டாம்.. கவனத்தை சிதற விடாமல் வேலைகளில் கவனம் செலுத்துங்கள். ஸ்டூடன்ட்ஸ் அதிக நேரம் படிக்க வேண்டும். மனகலக்கம் உண்டாகும். திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாவீங்க. எதிர்பாலினத்துடன் அதிக நெருக்கம் வேண்டாம். மற்றவர்களின் ரகசியங்களை யாருடனும் பகிர்ந்து கேலி பேச வேண்டாம். ப்ளீஸ் டோன்ட்.

துலாம்

கடந்த சில நாட்களாக, எதிர்த்து  செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பணவரவு நல்லபடியாக இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முன்பைவிட அநாயாசமாகச் செயல்படுவீங்க.  சிறு சங்கடங்கள் வரும்.  வெற்றி உணடு.   உறவினர்களால் செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் சற்று மந்த நிலை இருக்கும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் புரளி பேசி வம்பில் மாட்ட வேண்டாம். பொறாமைக்காரர்கள் வலுவிழப்பாங்க. எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீங்க. ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும். உற்சாகமாக இருப்பீங்க.தந்தைவழிச் சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். ரியல் சச்ஸஸ்.

விருச்சிகம்

குடும்பத்தில் அமைதி நிலவுவதில் உங்களின் பங்கு கணிசமாக இருக்கும். மனதளவில் முன்பைவிட நிம்மதியாக இருப்பீங்க. மாணவர்களின் முயற்சிகள் பலன்தரும்.      உறவினர்களால் செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் சற்று மந்த நிலை இருக்கும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் புரளி பேசி வம்பில் மாட்ட வேண்டாம். பொறாமைக்காரர்கள் வலுவிழப்பாங்க. எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீங்க. ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும். உற்சாகமாக இருப்பீங்க.தந்தைவழிச் சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவுவதில் உங்களின் பங்கு கணிசமாக இருக்கும். தாங்க் காட்.

தனுசு

மனதளவில் முன்பைவிட நிம்மதியாக இருப்பீங்க. மாணவர்களின் முயற்சிகள் பலன்தரும். புதிதாக சுபசெலவுகள் உண்டாகும். வேலையில் நெருக்கடிகள் குறையும். தாயின் ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பாதிப்புகள் உண்டாகாது.   சிலர் வெளியூர் பயணங்கள் கிளம்புவீங்க. ஸ்டூடன்ட்ஸ் படிப்பில் கேர்ஃபுல்லா  இருப்பீங்க. வீடு மனை விஷயத்தில் இருந்து வந்த பிரச்னைகளைத் தீர்ப்பீங்க. புதிய சொத்து வாங்குவது பற்றிய திட்டத்தில் முன்னேற்றம் உண்டு. மனதில் இருந்து வந்த இனம்புரியாத வேதனை மறையும். பிள்ளைகளின் உடல்நலத்தில் முன்னேற்றம் காண்பீங்க. முன்னேறத் தடைகள்  நீங்கும். சொத்து சம்பந்தமாக குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும் சமாதான உடன்பாடு உண்டாகும். அரசாங்கத்திடம் இருந்து வர வேண்டிய சான்றிதழ், கடிதங்களை வாங்கிவிடுவீங்க. வர வேண்டிய தொகை கைக்கு வரும். ஹாப்பி?                                       

மகரம்

பிள்ளைகளால் பெருமை ஏற்படும். விருந்து வைப்பதற்குச் செலவுகள் செய்வீங்க. வாகன பிராப்தி உண்டு. வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும் போது கவனம் தேவை. உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பீங்க. மனதைக் கட்டுப்படுத்தி வேலையில் கவனம் செலுத்தவும். புதிய கடன்கள் மூலம் வியாபாரத்தை  ஓவராகப் பெருக்க நினைக்க வேண்டாம். விவசாயிகளுக்கு மகசூல் நல்லா இருக்கும். வரவும் நிறைய இருப்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள. சக ஊழியா்கள் உங்களுக்கு ஓரளவுதான் உதவுவார்கள். வியாபாரிகள் தங்கள் கூட்டாளிகளை விட்டுப் பிரிய நேரிடலாம். எதிரிகளிடம் உஷாராக நடந்து கொள்ளவும். குடும்பத்தில் ஹாப்பியா ஒரு விஷயம் நடக்கும். நீங்களே எக்பெக்ட் செய்திருக்க மாட்டீங்க. கணக்கு வழக்குகளில் கேர்ஃபுல்லா  இருக்கவும். கலைத் துறையினா் புதிய ஒப்பந்தங்கள் பெறுவீங்க. குட் லக்.

கும்பம்

பணவரவிற்குக்  குறைவு இல்லை. பெண்மணிகள் கணவரின் பணிச்சுமையைக் குறைப்பீங்க. உடல் நிலையில் சற்று கவனம் தேவை. உறவினா்களை அனுசரித்துப்போவீங்க. ஸ்டூடன்ட்ஸ் சண்டை சச்சரவுகளில் ஈடுபடவேண்டாம். உங்கஅறிவாற்றல் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். தொழிலில் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். சிறு பயணங்களை மேற்கொண்டு பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீா்கள். தாயார் உடல் நலம் சீராகும்,. அதனால் மருத்துவ செலவுகள் கணிசமாகக் குறையும். வீட்டில் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். சகோதரி திருமண விஷயமாக பேச்சு வார்த்தைகள் சுபமாக முடியும். எடுத்த காரியஙகளில் வெற்றி காண்பீங்க. எதிர்பார்த்த லாபம் வரும்.  பட் பேச்சில் ரொம்பவும் கேர்ஃபுல்லா இருங்கப்பா. உங்க பேச்சே உங்களுக்கு எதிராய்த் திரும்பிடாம பார்த்துக்குங்க.  குட் லக்.

சந்திராஷ்டமம் : ஜுன் 17 முதல் முதல் ஜுன் 20 வரை

மீனம்

வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களது பணிகளை எளிதாக நிறைவேற்றுவீங்க. மேலதிகாரிங்க கூப்பிட்டு அப்ரிஷியேட் செய்வாங்க. அதே சமயம் அனுபவசாலிகள், தந்தையின் ஆலோசனையை ஏற்று நடப்பதால் பிரச்னையிலிருந்து மீளுவீங்க. அதிகாரிகளின் பாராட்டு, நல்ல சம்பளம், மற்றும் சலுகைகள் பெறுவீங்க. கலைஞர்களுக்கு வாய்ப்புகள் நல்லபடி அமைந்தும் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியாதபடி சற்றே வருந்துவீங்க. பயணத்தின்போது பொருட்களை கேர்ஃபுல்லா  பாதுகாத்துக் கொள்ளவும். விவேகமாக செயல்பட வேண்டிய நாள்.  முயற்சிகளில் ஒரு சில வெற்றி பெறும். அலுவலகத்தில்  உங்களைப் புரிந்து கொள்வார்கள்.  குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். கேர்ஃபுல்லா இருப்பவர்கள்  டோன்ட் ஒர்ரி.

சந்திராஷ்டமம் : ஜுன் 20 முதல் முதல் ஜுன் 22 வரை