வார ராசிபலன்: 24/07/2020 முதல் 30/07/2020 வரை! வேதாகோபாலன்

Must read


மேஷம்
சமூகத்துல நல்ல பெயர் எடுப்பீங்க.. உத்தியோகத்தில் இடமாற்றம். எதிர்நோக்கி இருந்தவங்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். உழைப்பினால் வெற்றி பெறுவீங்க. சில்லறை செலவுகள் ஏற்படும் சுப நிகழ்ச்சிகளை அடக்கமாக  நடத்தி  மகிழ்வீங்க. குழந்தைங்களால் ஹாப்பினஸ் உண்டாகும். பிசினஸ் செய்பவர்கள்  தங்கள்  ஊழியா்களிடம் சுமுகமாகப் பழகவும். பண வரவு சுமாராக இருப்பதால்  செலவுகளைக் குறைப்பீங்க.  கலைத் துறையில் உள்ளவர்களுக்கு  வருமானம் பெருகும். புதிய முதலீடுகளில் ஈடுபடுவது பற்றி யோசிப்பீா்கள். உறவினர் நண்பர்களுக்குக் கொடுத்த கடன், நீங்கள் வற்புறுத்தாமலேயே  நல்லபடியாக வசூலாகும். எதையும் உற்சாகமாகச் செய்வீங்க. கணவரின் பிடிவாதம் தளரும். தாங்க் காட்.
ரிஷபம்
உடன் இருப்பவர்களின் செயல்கள் உங்கள் டென்ஷனை தூண்டலாம்.  குடும்பத்தினரிடம் ஆர்க்யூமென்ட்டைத் தவிர்ப்பது நல்லதுங்க. ஆஃபீஸ்ல திடீர் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினரின் உதவியால் ஒரு கஷ்டத்திலிருந்து மீளுவீங்க. எதையும் தைரியத்துடன் எதிர்கொண்டு ஏற்றங்களை பெறுவீங்க. பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. திருமண சுபநிகழ்ச்சிகள் முயற்சிகளில் சற்று டிலே உண்டாகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித்தருவீங்க. பழைய பிரச்னைகள் ஸால்வ் ஆகும்.  
மிதுனம்
வியாபாரிகள் கூடுதலா வொர்க் பண்ணுவீங்க. ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கேர்ஃபுல்லா இருங்க.  பெண்களுக்கு மாற்றங்கள் வரும். செல்வ சேர்க்கை உண்டாகும். ஆடம்பர பொருட்கள் சேரும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே  இருந்த பிராப்ளம்ஸ் நீங்கி நெருக்கம் ஏற்படும்.  பிள்ளைகளுடன் மனதுக்கு பிடித்த இடத்திற்கு சென்று பொழுதை கழிப்பீங்க. சொத்து சம்பந்தமான முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மெத்தனப் போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். நம்பியவர்களே ஏமாற்றமளிக்கக்கூடும். கொஞ்சம் அதுக்கு மட்டும் மனசை ரெடி பண்ணிக்குங்க.
கடகம்
பிசினஸ் விஷயமாக அலைந்து முயற்சி செய்ய வேண்டியிருக்கும்.  முயற்சிகளில் இருந்து வந்த தாமதம் நீங்கும். பணியாளர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்கப்பெற்று சிறிதளவு அதிக முன்னேற்றம் அடைவர். பெண்களுக்கு தேவையேயில்லாத கற்பனை  டென்ஷன்ஸ் ஏற்படலாம். கனவுத் தொல்லைகள் உண்டாகும். பணவரவு திருப்தி தரும். நண்பர்கள் மூலம் உழைப்பால் உதவி கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைச்சுக்குங்களேன். ப்ளீஸ். கோபத்தைக் கட்டுப்படுத்த வேணுங்க. குடும்ப நடவடிக்கைகள் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த நன்மைகள் தாமதமாகக்கூடும்.. செலவுகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் முக்கிய ஐடியா ஒன்றை வழங்கி நல்ல பெயர் எடுப்பீங்க.
சிம்மம்
ஆஃபீசில்  செயல் திறமை மூலம் சிரமமான ஒர்க்கையும் எளிதாக செய்து முடிப்பீங்க.  கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக வாய்ப்புக்கு காத்திருந்தவர்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சியான நியூஸ் வந்து சேரும். அரசியலில் உள்ளோர் மக்களுடன் கலந்து பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகும். குடும்பத்தில் வர வேண்டிய தொகை காரணமாக ஒருவருக்கொருவர் மனத்தாபம் ஏற்படாமல் பார்த்துக்குங்க. நினைத்தது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருந்த நிலை மாறி இப்போதுதான் நிலைமை சீராக ஆரம்பிக்கும். நண்பர்கள் பகைவர்களை இனம் கண்டுகொள்ளுவீங்க. தந்தைக்கு நன்மை ஏற்படும். மூக்குக் கண்ணாடி அணிய வேண்டி வரலாம். தயாரா இருங்க.
கன்னி
பணிச்சுமை இன்கிரீஸ் ஆகும். உடன் இருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவாங்க.‘பாஸ்’க்கு உங்கள் மேல் இருந்து வந்த அபிப்ராயம் நல்ல முறையில் கூடும். லேடீஸ்க்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்னைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து கூடும். குடும்பத்தில் ஒற்றுமை சூப்பரா இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறீர்கள். வெரி குட். பிசினஸில் இருந்து வந்த தொய்வுகள் நீங்கும். பெரிய தொகைகளைக் கையாளும்போது கேர்ஃபுலா இருங்க. முன்கோபம் வராமல் காத்துக்கொள்ளுங்கள். நிதி நிலையில் பாதிப்பு இருக்காது. மனோதைரியம் கூடும்.  வெளிநாட்டில் வசிப்பவர்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறிவிடுவீங்க.
துலாம்
உடன்பிறந்தோருடன் வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குலையாது. ரிலேடிவ்களிடையே உள்ள அனுபவசாலிகளை  அட்ஜஸ்ட் செய்து நடந்துக்கிட்டா நல்ல அட்வைஸ்கள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றை அவாய்ட் செய்யலாம். குடும்பத்தில் சிறிய அளவு  மெடிக்கல் செலவுகள் ஏற்படும். பிசினஸ் செய்பவர்களுக்குப் போட்டியாளர்கள் அதிகரிக்கக்கூடும்.  பணியாளர்களுக்குக் கிடைக்கும்  வாய்ப்புகளால் நிலை உயரும்.  வீடு/ ஃப்ளாட் வாகனம் வாங்க, எதிர்பார்த்த பேங்க் லோன்ஸ் கிடைக்கும்.  டூர் போவதைத் தவிர்க்கப் பாருங்கள்.  வெளிநாட்டில் உள்ள குழந்தைகளிடமிருந்து நிம்மதியளிக்கும் நியூஸ் வரும். திடீரென உணர்ச்சிவசப்பட்டுப் பேசிடுவீங்க. ஜாக்கிரதை.  பழைய நினைவுகளை அசைபோட்டு மகிழ்ச்சி காண்பீங்க.  
விருச்சிகம்
நிதானத்தை கைக் கொள்ளுங்க. அவசர முடிவுகள் எதுவும் எடுத்து வைக்காதீங்க. வாகனங்களை மிகவும் கவனமாக ஓட்ட வேண்டும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பிசினஸில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். மனைவி மக்களுடன் இதமான சூழ்நிலை காணப்படும். எதிர்பாலின நட்புகளுடன் நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீங்க. குடும்பத்தாருடன் நேரலை சந்திப்பில் கலந்து கொள்ள நேரலாம். உறவினர்கள் மத்தியில் இத்தனை காலம் குறைந்திருந்திருந்த மதிப்பும் மரியாதையும் கூடும். சக பணியாளர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து புரிதல் ஏற்படுங்க. அக்கம்பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. அவர்கள் உதவி உங்களுக்குத் தேவைப்படும்.  ஆமா. சொல்லிப்புட்டேன்.  
தனுசு
மம்மியின் உடல் நிலையில் முன்னேற்றம் தெரியும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற பாடுபடுவீங்க. பணியாளர்களின் முயற்சியில் சாதகமான பலன் கிடைக்கும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவு உண்டாகும். உடற்சோர்வு உண்டாகலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரும் வருமானம் கொஞ்சம் டிலே ஆகுங்க. திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும். சில பாவ எண்ணங்கள் மனதில் தோன்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தீய செயல் செய்யும் நண்பர்களுடன் சேர வேண்டாம். பூச்சிக்கடி. போன்றவற்றிற்கு பயம் வேண்டாம். சிறிய வைத்தியத்திலேயே சரியாகும். டோன்ட் ஒர்ரி
மகரம்
எங்கும் எதிலும் டிலே ஆவதாக ஒரு சலிப்புத்தோன்றும். சினிமா அண்ட் கலைத்துறையினருக்குச் சாதகமான காலகட்டமாக  உள்ளது. புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வீங்க. தேவையற்ற வாக்குவாதம் வரலாம். மாணவர்கள் விரும்பிய துறையில் இடம் கிடைக்க சற்று அல்லாட வேண்டியிருக்கும். பயம் ஏற்படாமல் பார்த்துக்குங்கப்பா.  பணியாளர்கள் எடுக்கும் தீர்மானங்கள் தாமதமாகவே நிறைவேறும். மகிழ்ச்சி தரும் செலவுகளாகவே செய்வீங்க. பிசினஸ் செய்யத் தேவையான பண உதவி கிடைக்குங்க. கலைத்துறையில் உள்ளோருக்குப்  போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். அது  பற்றி ஏங்க கவலை? பெண்கள் எதிரிகளைச் சமாளிக்க முயன்று வெற்றிபெறுவீங்க. குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.  
சந்திராஷ்டமம்: ஜூலை 22 முதல் ஜூலை  24 வரை
கும்பம்
உங்களுக்குக் கீழே வேலை பார்க்கறவங்க உங்க வார்த்தைக்கு மதிப்பு தருவாங்க கணவன், மனைவிக்கிடையே போன வாரம் இருந்த அதே சகஜநிலை நீடிக்கும். பிள்ளைகள் மூலம் சிறிதளவு மனமகிழ்ச்சி ஏற்படும். பெண்களுக்குக் கற்பனைக் காரணங்களால் தேவையே இல்லாத  மனக்கவலை உண்டாகும். கல்வி சம்பந்தமான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத் தலைவரின் செலவு கூடும். சினிமா அண்ட் கலைத்துறையினருக்குப் புதிய சான்ஸ்கள்  தானாய்த் தேடி வரும் ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டி இருக்கும். பணிச் சுமை காரணமாக, சம்பந்தமே இல்லாதவர்கள் மீது திடீர் கோபம் உண்டாகலாம். அதை அவாய்ட் செய்யறது நல்லதுங்க.
சந்திராஷ்டமம்: ஜூலை 24 முதல் ஜூலை  26 வரை
மீனம்
யாரிடமும் பணிவாய்ச் செயல்படுவது நல்லதுங்க. உடன்பிறந்தோருடன் நல்லுறவு நீடிக்கும். குழந்தைகளிமிருந்து மகிழ்ச்சியான நியூஸ் வரும். உங்கள் ஒர்க்  அல்லது பிசினஸ் சார்ந்த விஷயங்களில் சாதனை செய்வீங்க. கலைத்துறையினருக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். வீட்டை விட்டு வெளியில் போக வேண்டியிருக்கும். சாப்பாடு, தூக்கமில்லாமல் வேலை செய்ய நேரலாம்.  எதிர்பார்த்த பணம் கிடைக்க சான்ஸ் குறைவு. இயந்திரப் பணியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.. சோம்பலைத் தவிர்க்க வேண்டும். மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். இளைஞர்களின் திறமை வளரும். பழைய ஃப்ரெண்ட்ஸ்ஸூடன்  கனெக்ஷன் புதுப்பித்து மகிழ்வீங்க.
சந்திராஷ்டமம்: ஜூலை 26 முதல் ஜூலை  29 வரை
 
 
 
 
 

More articles

Latest article