நாவல் பழம். (Syzygium Jambolanum).
நாவல் பழம் பழங்காலத்தில் இருந்தே பயன்பாட்டில் இருந்துவருகிறது. முருகனுக்கும் அவ்வவைக்கும் நடந்த உரையாடலில் சுட்டப்பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்ற உரையாடல் நம்மிடையே மிகப்பிரபலம்.
நாவல் பழம் அதிக மருத்துவகுணம் கொண்டது. இது ஆனி, ஆடி மாதங்களில் அதிகமாக கிடைக்கும். இது இனிப்பு கலந்து துவர்ப்பு சுவைகொண்ட பழம். இதில் இருக்கக்கூடிய மதர் டிஞ்சரானது ஓமியோபதி மருத்துவத்தில் சர்க்கரை நோயை குணப்படுத்தப்பயன்படுத்தப்படுகிறது.
நாவல் பழம் கொட்டை இவைகளை எடுத்துக்கொள்ளும்போது உடலில் இருக்கக்கூடிய கொழுப்பு, கார்ப்போஹைட்ரேட், வளர்ச்சிதை மாற்றம் போன்றவற்றை ஒழுங்குப்படுத்தி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் கல்லீரலின் செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தி  SGOT, SGPT போன்ற என்சைம்களை சீராக வைக்கிறது. கல்லீரலை பலப்படுத்துகிறது.
மேலும் இரத்தத்தில் உள்ள மொத்த கொழுப்பின் அளவைக் குறைத்து , எலும்பு சதைகளில் அதிக கொழுப்பு படிவதை தடுக்கிறது.
நாவல் பழம் மற்றும் கொட்டையில் உள்ள நொதி கணையத்தில் இருக்கும் பீட்டா செல்களை தூண்டி இன்சுலினை நன்கு சுரக்கச்செய்து  சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. இது சிறுநீரகத்தில் உள்ள யூரியா கிரியேட்டின், யூரிக் ஆசிட் ஆகியவற்றினை ஒழுங்குப்படுத்தி சிறுநீரகத்தை நன்கு செயல்படவைக்கிறது.
சித்த மருத்துவம்
மாந்தம் விளையும் வலிகரப்பா னுண்டாகுஞ்
சேர்ந்ததொரு  மதுமேகமும் சேருமோ- நாந்தலொடு
வாய்வுங் கடுப்பும்  வருங்கொதிப்புக் தாகமும்போந்
தூயநா வற்பழத்தாற் சொல்.
நாவற்பழத்தினால் அக்கினி மந்தம், சரீர கோவு, கிவென், சீதவாதம், காத்தல் இவை யுண்டாம். அதிரீரும் வெப்பமும், தாகமும் நீங்கும் என்ன.
உபயோகிக்கும் முறை:- இனிப்புள்ள நாவற்பழத்தை உண்ண இரைப்பைக்கு பலத்தைக் கொடுக்கும், இருதயத்தில் சூட்டை தணிக்கும், மலத்தையும் நீரையும் கட்டும். புளிப்புச்சுவையுள்ள பழத்தை உண்ண தொண்டையைக்கட்டும்.
நாவற்பழத்தை உப்பிட்டு உண்ணக் தொண்டைக்கட்டுக்கு  பரிகாரம்
நாவற்பழத்திலிருந்து சாறாக எடுத்து ஒரு பங்கு சர்பத்தாக காய்ச்சி வைத்துக் கொண்டு வேளைக்கு தண்ணீர் ஒரு பங்கு, நாவற்பழச்சாறு சமபங்கு 1-1 உட்கொள்ளும்போது  மூத்திரம், உடல் வெப்பம் போகும், பெண்களுக்கு உதிரப்போக்கு போகும்.  மதுமேகநோய் எனப்படும் நீரிழிவு நோய் குணமாகும்
மருத்துவர் பாலாஜி கனகசபை, MBBS, PhD(Yoga)
அரசு மருத்துவர்
கிருஷ்ணகிரி மாவட்டம்
9942922002