சென்னை: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகே உள்ள சுரங்கபாதை மெட்ரோ பணிகளால் மூடப்பட்டிருந்ததால், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வரும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால், மருத்துவமனைக்கு செல்லும் சுரங்க பாதை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், எஸ்கலேட்டர் வசதியுடன் நவீனமாக்கப்பட்டுள்ள இந்த சுரங்கபாதை இன்னும் ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
மெட்ரோ பணிகளால் கடந்த சில ஆண்டுகளாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு செல்லும் சரங்கபாதை மூடப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள், நோயாளிகள் சாலையை கடக்க பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால், விரைவில் சுரங்கபாதையை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், அந்த சுரங்கப்பாதை நீவனப்படுத்தப்பட்டு, பணிகள் முழுமை அடைந்து வருகிறது என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அருகில் சென்னை மெட்ரோ இரயில் சுரங்கப்பாதையில் சில தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இப்பணியில் ஒவ்வொரு நிலையிலும் ஒரு சில நாட்கள் தேவைபடுவதால் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாவும் விரைவில் இப்பணிகள் முடிக்கப்பட்டு ஒரு மாத காலத்தில் இந்த சுரங்கப்பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தாயாராகும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் எதிரே பயணிகள் மற்றும் பொதுமக்கள் சாலையை எளிதாக கடந்து செல்வதற்காக நகரும் படிக்கட்டு மற்றும் மின்தூக்கி வசதிகளுடன் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையில் சில தொழில்நுட்ப பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொழில்நுட்ப பணிகளுக்கு ஒவ்வொரு நிலையிலும் ஒரு சில நாட்கள் தேவைபடுகிறது. மேலும், மழைநீர் உட்புகாத வகையிலும் மழைநீர் தேங்காத வகையில் அதற்கான வடிகால் வசதியும் செய்யப்பட்டு வருகிறது. இப்பணிகள் அனைத்தும் இறுத் கட்டத்தை எட்டியுள்ளது, இப்பணிகள் விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையை கண்காணிக்க காவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கு ஏதேனும் சமூக விரோத செயல், அத்துமீறல், உண்மைக்கு புறம்பான செயலில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இந்த சுரங்கப்பாதை பகுதியில் சமூகவிரோத செயலில் ஈடுபடக்கூடாது. மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அருகில் உள்ள சுரங்கப்பாதை தொழில் நுட்ப பணிகள் முடிவடைந்த உடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கூறிய மெட்ரோ ரயில் அதிகாரிகள் , “சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, எதிரெ உள்ள அரசு மருத்துமனைக்குச் செல்லும் சாலையில், எப்போதும் மக்கள் கூட்டம் உள்ளது. எனவே, மக்கள் வசதியாகவும், பாதுகாப்பாகவும் செல்வதற்காக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் பெருமளவு முடிந்துள்ள நிலையில், எஸ்கலேட்டர்கள் இணைக்கும் பணிகளும் ஓரிரு நாளில் முடிந்துவிடும். அதன்பிறகு சுரங்கப்பாதை மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் திறந்துவைக்கப்படும்” என்றனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே, பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு கீழே சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இரு வழித்தட மெட்ரோ ரயில்களும் இணையும் முக்கிய மையமாக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. இதன் அருகே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், புறநகர் மின்சார ரயில் நிலையம், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ஆகியவை இருப்பதால், இந்தப் பகுதிகளில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. ஏற்கெனவே, பூங்கா நகர்-சென்னை சென்ட்ரல் மின்சார ரயில் நிலையத்துக்கு எஸ்கலேட்டர் வசதியுடன் கூடிய சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்துடன் மற்ற பகுதிகளை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, எதிரே உள்ள ராஜீவ்காந்த் அரசு மருத்துனை மற்றும் அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையம், பூங்கா ரயில் நிலையத்துக்குச் செல்ல சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வரும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இது விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.