சென்னை : நாளை முதல் (அக்டோபர் 1) ரூ.2000 நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  ரூ.2000 நோட்டை வங்கிகளில் மாற்ற இன்றே கடைசி நாளாகும்.  அதனால் வங்கிகளில் கூட்டம் அலைமோதுகிறது. பொதுமக்கள் சிறுகசிறுக சேர்த்து வைத்த ரூ.2000 நோட்டுக்களை மாற்ற முடியாமல்  தவித்து வருகின்றனர்.

மத்தியஅரசு, கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பை ஏற்படுத்தி, மக்களியே அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து 2026ம் ஆண்டு  நவம்பரில் புதிய ரூ.2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரூ.2000 நோட்டுக்கள் கடந்த 7 ஆண்டுகளாக புழகத்தில் இருந்து வந்த நிலையில், 2023ல், செப்டம்பர் 30ம் தேதிக்குபிறகு ரூ.2000 நோட்டுக்கள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி  கடந்த மே மாதம் அறிவித்தது.

பொதுமக்களிடம் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்  அதற்கு  5 மாதங்கள் அவகாசம்  வழங்குவதாகவும் அறிவித்தது. இதையடுத்து, பலர் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றியும், வங்கி கணக்கில் டெபாசிட் செய்தும் வருகின்றனர்.  இந்த நிலையில், 2023 ஆகஸ்ட் மாத இறுதியில் மே 19ம் தேதியன்று புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுக்களில் 93 சதவீதம் வங்கிகளுக்கு திரும்பியது என ரிசர்வ் வங்கி கூறியது.

இந்த நிலையில்,  சூழலில் ரூ.2000 மாற்றுவதற்கான கெடு, இன்றுடன் முடிவடைகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகளில்  கடந்த ஒரு வாரமாகவே ரூ.2000 நோட்டுக்களை வாங்க மறுத்து வருகின்றனர்.  ஏற்கனவே  கோவில்களில் போடப்பட்டுள்ள ரூ.2000 நோட்டுக்களை அடையாளம் காணும் வகையில் உண்டியல் எண்ணிக்கை  நடத்தப்பட்டது. மேலும்,  மேலும் தற்போதைய தொடர் விடுமுறை காரணமாக பல இடங்களில் வணிகர்கள் ரூ.2000 நோட்டை வாங்க மாட்டோம் என்று அறிவித்து உள்ளனர். இதனால், பொதுமக்கம் வங்கிகளில் குவிந்து வருகின்றனர். தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுக்களை  வங்கிகளில் டிபாசிட் செய்து வருகின்றனர்.
ரூ.2000 நோட்டு மாற்றுவதற்கான காலக்கெடு இன்று முடிவதால் இதுவரை நோட்டுக்களை மாற்றாமல் இருந்தவர்கள்,  கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.  நாடு முழுவதும் மிலாடி நபி விடுமுறை . இன்று ஒருநாள் மட்டுமே வேலை நாள்., நாளை  ஞாயிறு விடுமுறை, தொடர்ந்து  திங்கட்கிழமை காந்தி ஜெயந்தி  விடுமுறை என , தொடர் விடுமுறை வருவதால் வங்கிகளும் செயல்படாத நிலையில், பொதுமக்கள் தங்களிடம் உள்ள  2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று மட்டுமே வங்கிகள் செயல்படும் என்பதால், அப்பாவி பொதுமக்கள் வங்கிகளில் குவிந்து வருகின்றனர். இதற்கிடையில் வணிகர்களும், பெரும் பண முதலைகளும் வங்கிகளில் முகாமிட்டு, தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுக்களை மாற்ற முயற்சித்து வருகின்றனர். இதனால் வங்கிகளில் இன்று காலை முதலே கூட்டம் அலைமோதுகிறது.