சென்னை

ரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகி உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தென் மேற்கு பருவ மழை காரணமாக மழை பெய்து வருகிறது.   இந்நிலையில் கிழக்கு மத்திய அரபிக் கடலில் கோவா கடற்கரைப் பகுதியை ஒட்டி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக வானிலை மையம் கூறி உள்ளது.

மேலும் வடகிழக்கு வங்கக் கடல் பகுதியிலும் இதைப் போல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக்கும் இது மேலும் வலுவடைந்து ஒடிசா மேற்கு வங்கத்தை நோக்கி நகரலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இந்த இரு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் கரணமாக தமிழகத்தின் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் அக்டோபர் 5 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

மேலும் கேரளா, லட்சத்தீவுகள், கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 65 கிமீ வேக சூறைக்காற்றுடன் கன மழை பெய்யலாம் எனவும், இப்பகுதி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.