பருத்தியூர் ராமர் கோயில்

பருத்தியூர் ராமர் கோயில், தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராமர் கோயிலாகும். பஞ்சராமர் தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

அமைவிடம்

இக்கோயில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் பருத்தியூர் என்னுமிடத்தில் உள்ளது. இவ்வூர் பருத்தியூர் எனவும், ஆவணம் பருத்தியூர் எனவும் வழங்கப்படுகிறது.

மூலவர்

தெற்கு நோக்கிய சன்னதியில் ராம பரிவாரத்தைக் காணலாம். பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி இக்கோயிலை எடுத்துக்கட்டினார். அவர் இந்தியா முழுவதம் ராமர் கதை, ராமநாத பாராயணம், ராமர் மேல் சங்கீதங்கள் ஆகியவற்றைப் பாடி இக்கோயிலை அமைத்தார். அழகு மிக்க ராமருக்கு சிறப்பான சிற்பங்கள் அமைந்த கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகக் கருதப்படுகிறது. அவ்வாறு அமைந்த ராமர்களாக வடுவூர் ராமர், மதுராந்தகம் ராமர், வடக்கு பிணையூர் ராமர் ஆகிய சிற்பங்களைக் கூறுவர்.

பிற சன்னதிகள்

இக்கோயிலில் வரதராஜர், மகாலட்சுமி, விசுவநாதர், விசாலாட்சி ஆகியோர் உள்ளனர். தில்லைவிளாகத்தில் உள்ளதைப் போன்று இக்கோயிலிலும் வினையும், பெருமாளையும் ஒரு சேரத் தரிசிக்கின்ற வாய்ப்பினை அனைவரும் பெறலாம்