மும்பை

ட்சியின் சின்னம் தங்களிடம் உள்ளதாகத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாரும் எதிர்பாராத வகையில் மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த மூத்த தலைவர் அஜித்பவார் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்தார். ராஜ்பவனில் அஜித்பவார் துணை முதல்வராகவும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களான சகன் புஜ்பால், தனஞ்செய் முண்டே, அதிதி தட்காரே, ஹசன் முஷ்ரிப்,  உள்ளிட்ட 8 பேர் அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர்.

இந்த திடீர் மாற்றம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.  ஏற்கனவே  ஏக்நாத் ஷிண்டே பின்பற்றிய அதே பாணியில் அஜித்பவார் தேசியவாத காங்கிரசை உடைத்தார். இவ்வாறு அஜித்பவார் கட்சியை உடைத்ததை அடுத்து சரத்பவார், அவரது ஆதரவாளர் ஜித்தேந்திர அவாத்தை எதிர்க்கட்சி தலைவராக அறிவித்தார்.

கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக அஜித்பவார் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற செயல் தலைவர் பிரபுல் பட்டேல், சுனில் தட்காரே எம்.பி.யை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார். அமைச்சர் பதவி ஏற்ற அஜித்பவார் உள்பட 9 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யவும் சரத்பவார் தரப்பு சபாநாயகர் ராகுல் நர்வேக்கரிடம் கடிதம் கொடுத்தது.

இன்று சரத்பவார், அஜித்பவார் தங்கள் பலத்தை நிரூபிக்க இன்று (புதன்கிழமை) களத்தில் இறங்கினர்.   இவர்கள் இருவரும் தனித்தனியாக தங்கள் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

சரத் பவார் கூட்டத்தில்,

”நம்மை ஒட்டு மொத்த நாடும் நம்மைக் கவனித்துக் கொண்டு இருக்கிறது.  இக்கூட்டம் தேசிய வாத காங்கிரஸ் கட்சிக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. நாம் தடைகளைத் தாண்டி நமது வழியில் முன்னேறிச் செல்ல வேண்டும். தமக்கு எதேனும் பிரச்சினை இருப்பதாக அஜித் பவார் கருதி இருந்தால் அவர் என்னிடம் பேசியிருக்க வேண்டும்.   அவர் மனதில் எது இருந்தாலும் என்னைத் தொடர்பு கொண்டு இருக்கலாம். இந்தக் கட்சியின் சின்னம் நம்மிடம் தான் இருக்கிறது. நமக்கு அதிகாரத்தைக்  கொடுத்த மக்களும் கட்சி தொண்டர்களும் நமக்கு ஆதரவாகவே உள்ளனர்”

என்று உரையாற்றி உள்ளார்.