parthiv-padelபார்த்திவ் படேல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. அவர் இறுதியாக கும்ப்ளே கேப்டனாக இருந்தபோது, அணியில் இடம் பிடித்தார். தோனியின் எழுச்சிக்கு பின், பார்த்திவ் இந்திய அணியில் இரண்டாம் தர வீரராக மாறிப்போனார். சஹா, ஓஜா, தினேஷ் கார்த்திக் வருகைக்குப் பிறகு அந்த இடமும் காலி. சரியாக 8 வருடங்கள் கழித்து அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார். தற்பொழுது, இந்திய அணியின் பயிற்சியாளர் கும்ப்ளே.

பார்த்திவ் படேல் தேர்வுக்கு, சஹா காயம். அவருக்கு அடுத்து உள்ள ஒஜாவும் காயம், தினேஷ் கார்த்திக் வலதுகை பேட்ஸ்மேன். எனவே இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராகவும் உள்ள பார்த்திவ் படேல் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும், பார்த்திவ் படேல் உள்ளூர் போட்டிகளில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு திறமையை வெளிப்படுத்தினாலும், சர்வேதேச போட்டியில் விளையாடி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. கும்ப்ளேவின் தலையீட்டிற்கு பின்பு தான் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் விவரம்: விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், முரளி விஜய், சேத்தேஷ்வர் புஜாரா, கருண் நாயர், பார்தீவ் படேல் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜெய்ந்த் யாதவ், அமித் மிஸ்ரா, முகமது சமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியா.