647_092716084531சேவாக் – கம்பீர் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் என்றால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இருவரும் சேர்ந்து பல சாதனைகள் புரிந்துள்ளனர். உலகின் அபாயகரமான பேட்ஸ்மேன் என பெயர் எடுத்த சேவாக்கின் ஓய்வு சிறப்பானதாக அமையவில்லை. 35 வயதை எட்டி உள்ள கம்பீரும் தற்பொழுது அதே நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.

நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்த கம்பீர், நியூசிலாந்து டெஸ்ட் தொடரின்போது அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாட வில்லை. இதனால் மீண்டும் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த கம்பீருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 35 வயதை தண்டியதால், இனி அணியில் இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அனேகமாக கம்பீரின் ஓய்வு மோசமானதாக அமையவே வாய்ப்பு உள்ளது.