மும்பை

கொரோனா தடுப்பூசி தயாரிக்க உள்ள சிரம் இன்ஸ்டிடியூட் உரிமையாளர் சைரஸ் பூனேவாலா தனது பார்சி இனத்தவருக்காக 60000 டோஸ் ஒதுக்கி வைக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் கண்டு பிடித்துள்ள கொரோனா தடுப்பூசி மனித சோதனையில் இரு கட்டம் வரை வெற்றி  பெற்றுள்ளது.  இந்த தடுப்பூசியை இந்தியாவில் சிரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்க உள்ளது.   இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனை இந்தியாவில் நடைபெற உள்ளது.   சீரம் இன்ஸ்டிடியூட் உரிமையாளரான சைரஸ் பூனேவாலா பார்சி இனத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

பார்சி இனத்தவர் இந்தியாவில் சிறிது சிறிதாகக் குறைந்து வருகின்றனர்.  எனவே இந்த தடுப்பூசியைப் பங்கிடும் போது அவர்களுக்கு மிகவும் குறைவான அளவிலேயே கிடைக்க வாய்ப்ப்ள்ள்தாககூறப்படுகிறது.  எனவே இது குறித்து பார்சி இனத்தவரிடம் இருந்து தங்கள் இனத்தைச் சேர்ந்த சைரஸ் பூனேவாலாவுக்கு கோரிக்கைகள் விடப்பட்டுள்ளன.

முன்னாள் மும்பை பார்சி பஞ்சாயத்துத் தலைவர் தின்ஷா மேத்தா விடுத்துள்ளார். அவர், ”சிரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்க உள்ள உங்கள் தடுப்பூசி தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் முதல் இடத்தை பிடித்துள்ளது.  எனவே நமது பார்சி இனத்தவருக்காக 60000 டோஸ்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்  தற்போது கொரோனா தாக்குதலில் 40 பார்சிகள் மரணம் அடைந்துள்ள நிலையில் இந்தியாவில் 60000 பார்சிகள் மட்டுமே உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்

இதற்கு சைரஸ் புனேவாலா ஒப்புக் கொண்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

சைரஸ் புனேவாலாவின் மகன் அதார் புனேவாலா டிவிட்டரில் இது  போல ஒரு கோரிக்கைக்குப் பதிலளிக்கையில் தாங்கள் பார்சி இனத்தவருக்குத் தேவையான அளவுக்கு மருந்து ஒதுக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.  மேலும் அவர் தனது நிறுவனத்தின் ஒரு நாள் உற்பத்தி இந்த பூமியில் உள்ள அனைவருக்கும் கொடுக்க போதுமானது எனவும் கூறி உள்ளார்.