மக்களவை மழைக்கால கூட்டத் தொடரை இரு அமர்வுகளாக நடத்த திட்டம்?

Must read

டெல்லி:
கொரோனா பரவல் காரணமாக மக்களவை மழைக்கால கூட்டத் தொடரை இரு அமர்வுகளாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை கூட்டத் தொடரை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மக்களவை கூட்டத் தொடர் மதியம் 1 மணிக்கு முடிந்தவுடன் 3 மணி நேரம் கிருமிநாசினி கொண்டு தீய்மைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மாநிலங்களவை கூட்டத் தொடரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

More articles

Latest article